ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபுதேவா இயக்கத்தில் உருவாகி வரும் ஆக்ஷன் ஜாக்சன் படத்திற்காக, அஜய் தேவ்கன், உடல் எடையை 17 கிலோ குறைத்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்கு, பிட் மற்றும் ஒல்லியாக உடலமைப்பு தேவைப்படுவதாக பிரபுதேவா சொன்னதற்காக, தனது உடல் எடையை, அஜய் தேவ்கன், 17 கிலோ குறைத்துள்ளார். இந்த படத்தில், ஒல்லியான மற்றும் பிட் ஆன அஜய் தேவ்கனை பார்ப்பதோடு மட்டுமல்லாது, நிஞ்ஜா போர்வீரர்களுடன் சண்டை போடும் அசகாய திறன் கொண்ட அஜய் தேவ்கனை இதில் பார்க்கலாம். இதற்காக, பிரபுதேவா, நிஞ்ஜா போர்வீரர்கள் பயன்படுத்தக்கூடிய கத்தி மற்றும் வாளை, 10 நாட்கள் தேடுதலுக்கு பிறகு தேர்வு செய்துள்ளார். போர் வீரராக கலக்குவதோடு மட்டுமல்லாது, இந்த படத்தில், அஜய் தேவ்கன், சோனாக்ஷி சின்கா, யாமி கவுதம் மற்றும் மனஸ்வி மம்கையுடன் ரொமான்சும் செய்திருக்கிறார். மனஸ்வி மம்கை, இயக்குனர் பிரபுதேவாவின் தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது.