ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹாப்பி எண்டிங் படத்தின் ஒரு பாடலுக்காக, சிக்ஸ் பேக் உடலமைப்புடன் காமெடி நடிகர் கோவிந்தா நடனமாடியுள்ளார். காமெடி நடிகர்கள் நகைச்சுவை காட்சிகளில் மட்டும் தான் கலக்குவார்கள் என்ற விதியை உடைக்கும் வகையில், தன்னுடைய ரசிகர்களை மகிழ்விப்பதற்காக, எந்த ஒரு வகையிலான நடிப்பையும் வெளிக்காட்ட தயாராக இருப்பவர் கோவிந்தா. ஹாப்பி எண்டிங் படத்தில் "ஜி பாத் கே" என்ற பாடலில் நடனம் ஆடியுள்ளதோடு மட்டுமல்லாது, இப்படத்திற்காக, சிக்ஸ்பேக் வடிவமைப்பிற்காக, மிகுந்த சிரத்தை எடுத்துள்ளார். அர்மான் இதுகுறித்து கூறியபோது, சிக்ஸ்பேக் குறித்து கோவிந்தா தயக்கம் தெரிவிப்பார் என்று தான் கருதிய நிலையில், ஆனால், கோவிந்தாவோ, எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல், உடனே, அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என கூறினார். ஹாப்பி எண்டிங் பட இயக்குனர் ராஜ் கூறியதாவது, கோவிந்தா சிறந்த வேகமான அதே சமயத்தில் விவேகமான நடிகர் ஆவார். தன் ரசிகர்களை மகிழ்விக்க, எத்தகைய போட்டிகளையும் எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருப்பவர் என்று கூறினார்.