ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இன்றைய தேதியில் அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் ஹீரோ யார் தெரியுமா? சந்தேகமில்லாமல்.....விஜய் சேதுபதிதான். மெல்லிசை, புறம்போக்கு, இடம் பொருள் ஏவல், ஆரஞ்சு மிட்டாய், வன்மம், நானும் ரௌடிதான் என அரைடஜன் படங்களில் நடித்துக் கொண்டிருப்பதோடு, மேலும் அரை டஜன் படங்களில் நடிக்க வாய்மொழி உத்தரவாதம் கொடுத்திருக்கிறார். இந்த அரைடஜன் படங்களில் விஜய்சேதுபதியின் நடிப்பில் வெளிவரம் முதல் படம் வன்மம். இப்படம் நவம்பர் 21 அன்று வெளியாக இருக்கிறது. நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் வன்மம் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து இரண்டாவது ஹீரோவாக கிருஷ்ணா நடித்திருக்கிறார்.
கமலிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அறிமுக இயக்குனர் ஜெய் கிருஷ்ணா இப்படத்தை இயக்கி இருக்கிறார். வன்மம் படத்தில் ஒரு சிறப்பு என்னவென்றால்....விஜய் சேதுபதி படம் முழுக்க வெள்ளை வேஷ்டி சட்டையுடன்தான் வலம் வருகிறாராம். இந்த வருடப் பொங்கலுக்கு வெளியாகி வெற்றியடைந்த வீரம் படத்தில் அஜித் வெள்ளை வேஷ்டி சட்டையுடன்தான் நடித்திருந்தார். இந்தப் படத்திலோ வேட்டி சட்டையில்...விஜய் சேதுபதி!வீரம் படத்தின் வெற்றி சென்டிமென்ட் வன்மம் படத்துக்கும் வொர்க் அவுட்டாகுமா?
வெயிட் அண் ஸீ..