ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
காகதீய வம்சத்தை சேர்ந்த ராணி ருத்ரமா தேவி கதாபாத்திரத்தில், அனுஷ்கா சர்மா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட் இயக்குனர் சுஜோய் கோஷ், ராணி ருத்ரமா தேவியின் வாழ்க்கை குறித்து ஈர்க்கப்பட்ட சுஜோய், அதனை படமாக்க திட்டமிட்டிருந்தார். ராணி ருத்ரமா தேவி கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக, நடிகை வித்யா பாலனை, சுஜோய் அணுகியிருந்தார். இந்த முயற்சி பலனளிக்கவில்லை. இந்நிலையில், காபி ஷாப்களில், சுஜோயும், அனுஷ்கா சர்மாவும் சேர்ந்து பொழுதை கழித்து வருகின்றனர். சுஜோய், ராணி ருத்ரமா தேவி கதாபாத்திரத்தில், அனுஷ்காவை நடிக்க வைக்க ஆலோசனை நடத்தியுள்ளார். இதற்கு, அனுஷ்கா சர்மா தரப்பில் இதுவரை எந்த பதிலும் வரவில்லையாம்...!