ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
அமிதாப் பச்சன் தான் நடிக்கும் புதிய படத்திற்காக தனது உடல் எடையை அதிகப்படுத்தி உள்ளார். தற்போதைய இளம் நடிகர்கள் தாங்கள் நடிக்கும் புது படங்களுக்காக 6 பேக் 8 பேக் என வைத்து உடலை வருத்திக் அசத்தி வருகின்றனர். ஆனால், முன்னணி நடிகரான அமிதாப்போ பிகு படத்தில் தனது கேரக்டருக்காக உடல் எடையை அதிகமாக்கி வருவதுடன் தொப்பையையும் வளர்த்து வருகிறாராம்.
இதற்கு முன் எப்போதும் பார்த்திராத புதிய தோற்றத்துடன் அமிதாப் உள்ளாராம். இந்த படத்தில் தீபிகா படுகோனேவிற்கு தந்தையாக நடிக்கிறாராம் அமிதாப். இந்த படத்தில் இர்பான் கானும் நடிக்கிறாராம். இவரும் இந்த படத்தில் முற்றிலம் மாறுபட்ட அழகிய தோற்றத்தில் நடிக்கிறாராம். மக்களிடம் தமது கேரக்டர் நல்ல வரவேற்பை பெற வேண்டும் என்பதற்காக தீவிர முயற்சிகளையும் எடுத்து வருகிறாராம் அமிதாப். இந்த படத்தை சூஜித் சிர்கார் இயக்குகிறார்.