காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
விளம்பர படங்களை இயக்கிக் கொண்டிருந்த ராஜேஷ் ஆல்பிரட் இயக்கி வரும் படம் சுற்றுலா. இதில் ரிச்சர்ட்ஸ், மிதுன், பிரஜன், அங்கீதா, ஸ்ரீஜி, சாண்ட்ரா நடித்துள்ளனர். பரணி இசை அமைத்துள்ளார். காட்டுக்குள் சுற்றுலா செல்லும் சில நண்பர்கள் அங்கு அனுபவிக்கும் சில பயங்கர அனுபவங்கள்தான் படத்தின் கதை. மழை பெய்யும் காடுகளில் படப்பிடிப்பு என்பதால் இரண்டு வருடங்கள் மழைக்காக காத்திருந்து படம் பிடித்துள்ளனர்.
இப்போது இந்தப் படத்தை வேறொரு நிறுவனம் வாங்கி விட்டது. படத்தை பார்த்த அந்த நிறுவனம் ஒரு குத்துப்பாட்டை படத்தில் சேருங்கள் என்று கூறியிருக்கிறது. காட்டுக்குள்ளேயே நடக்கும் கதையில் எப்படி திடீரென்று குத்துப்பாட்டு வைப்பது என்று யோசித்து கடைசியில் கதையில் சிறு மாற்றம் செய்தனர்.
கதை ஊட்டி காட்டில் நடக்கிறது. ஊட்டில் உள்ள ஒரு பெண் ரிச்சர்ட்டை ஒருதலையாக காதலிப்பது போலவும் அந்த பெண் காட்டுக்குள் இருக்கும் ரிச்சர்டை ஊட்டி நகருக்கு வரவைத்து அங்கு ஒரு பப்பில் அவருடன் ஆடுவது போன்றும் கதையில் ஒரு புது விஷயத்தை சேர்த்து சென்னையில் அந்த பாட்டை எடுத்து முடித்து விட்டார்கள். இந்த பாட்டை மூன்று நாளில் எடுத்து முடித்து படத்தில் சேர்த்து விட்டார்கள். ரிச்சர்டுடன் ஆடியிருப்பவர் ரிஷா.