ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த சில மாதங்களுக்கு முன் மைசூரில் தொடங்கிய, லிங்கா படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்றது. சமீபத்தில் ரஜினிகாந்த், சோனாக்ஷி சின்ஹா கலந்துகொண்ட ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு ஹைதராபாத்திலுள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்தது. இந்தப்பாடல் காட்சி உடன் லிங்கா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது. தற்போதைய சூழலில் இன்னும் ஒரேயொரு பாடல் மட்டுமே பாக்கியாம். அப்பாடல் தவிர எல்லாம் முடிந்து விட்டது. அடுத்து படமாக்கவுள்ள பாடல் காட்சி ரஜினியின் அறிமுகப்பாடலாம். பொதுவாக ரஜினியின் அறிமுகப்பாடலை உள்ளூரில்தான் எடுப்பார்கள்.
முதன்முறையாக லிங்கா படத்தில் ரஜினியின் அறிமுகப்பாடலை பிரான்ஸ், இத்தாலி, ஹாங்காங் ஆகிய நாடுகளில் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக லிங்கா படக் குழுவினர் இன்னும் சில நாட்களில் வெளிநாடு பறக்கவிருக்கின்றனர். இப்பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறாராம். இப்பாடல் காட்சியை பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்து எடுத்து தர இருக்கிறார். இதற்கிடையில் ரஜினிகாந்த் தனது போர்ஷனுக்கான டப்பிங் வேலைகளை முடித்துக் கொடுத்து விட்டாராம். மற்ற நட்சத்திரங்கள் இன்னும் ஒருசில நாட்கள் டப்பிங் பேசினால் மொத்த டப்பிங் வேலையும் முடிந்து விடுமாம். ஏற்கெனவே அறிவித்தபடி லிங்கா படத்தை ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். அதன் காரணமாகவே, லிங்காவின் வேலைகளை மேலும் சுறுசுறுப்பாக்கியிருந்தாராம் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். தற்போதையை தகவலின்படி லிங்காவை பொங்கலுக்கு களமிறக்க வாய்ப்பிருக்கிறது.