ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீதிவ்யா மூன்று தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்த பிற-கு தமிழில் காட்டுமல்லி என்ற படத்தில் விதார்த் ஜோடியாக அறிமுகமானார். அந்தப் படம் பாதியில் நிற்கிறது. அதன் பிறகு நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் மூலம் பிரபலமாகிவிட்டார். அடுத்து வெளிவந்த ஜீவா படமும் அவருக்கு பெயரை பெற்றுக் கொடுத்திருக்கிறது. தற்போது டானா, ஈட்டி, பென்சில், வெள்ளைக்கார துரை, காக்கி சட்டை, நகர்புறம் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஸ்ரீதிவ்யா தனது சொந்த மொழியான தெலுங்கில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். ஸ்ரீதிவ்யா நடித்த தெலுங்கு படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. அதனால் அங்கு அவருக்கு பெரிதாக பெயர் இல்லை. கடைசியாக வாரதி என்ற படத்தில் நடித்தார். அது அடுத்த மாதம் ரிலீசாகிறது.
இப்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். வாரதி வெற்றி பெறும்பட்சத்தில் தெலுங்கு படங்களுக்கு முக்கியத்தும் கொடுக்க முடிவு செய்திருக்கிறார். இவரது சகோதரியான ஸ்ரீரம்யா தமிழில் யமுனா என்ற படத்தில் நடித்தார். அந்த படம் தோல்வி அடையவே தெலுங்கிற்கே திரும்பிச் சென்று விட்டார்.