ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
''அரண்மனை'' படத்திற்கு பிறகு சுந்தர்.சி இயக்கும் படம் ஆம்பள. இதில் விஷால் ஹீரோ. ஹன்சிகா உள்பட மூன்று ஹீரோயின்கள். ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா என்ற மூன்ற மாஜி ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். விஷாலுக்கு மூன்று அத்தைகள் அவர்கள் தங்கள் மகளை விஷாலுக்கு கட்டி வைக்க போடும் போட்டிதான் கதை. அதில் ரம்யா கிருஷ்ணன் மகளாக ஹன்சிகாக நடிக்கிறார். மற்ற இரு ஹீரோயின்களும் மற்ற இருவரின் மகளாக நடிக்கிறார்கள். மூன்று ஹீரோயின்கள் என்றாலும் ஹன்சிகாவுக்குதான் ஏக முக்கியத்தும். படத்தில் மொத்தம் 6 பாடல்கள். அதில் நான்கு பாடல்கள் ஹன்சிகாவுக்குத்தான், மற்ற இரண்டில் ஒன்றில் மூவரும் ஆடுகிறார்கள்.
இப்போது படத்தின் கூடுதல் மதிப்பாக ஆண்ட்ரியாவும் படத்தில் நடிக்கிறார். அதாவது கெஸ்ட் ரோலில். மூன்று அத்தைகளும் தங்கள் மகளை விஷாலுக்கு கட்டி வைக்க போட்டி போடும்போது நான்தான் விஷாலின் காதலி என்று திடீரென வீட்டுக்குள் புகுந்து கலாட்டா செய்யும் கேரக்டராம். ஆம்பள படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஊட்டியில் நடந்து வருகிறது. அங்கு சென்று மூன்று நாட்கள் தங்கியிருந்த தனது போர்ஷனை நடித்து கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் ஆண்ட்ரியா. பூஜை படத்தில் ஆண்ட்ரியா விஷாலுடன் குத்தாட்டம் போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.