ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் ஆக்ஷ்ன் ஹீரோவான அக்ஷ்ய் குமார், தனது விளம்பர படம், சினிமா உள்ளிட்ட பல சண்டைக்காட்சிகளில் பல்வேறு சாகசங்களை செய்து இருக்கிறார். இப்போது ஒரு சிறிய ரக விமானத்தை தன் கையால் இழுத்து அசத்தியிருக்கிறார். அக்ஷ்ய் குமார், தி ஷாக்கீன்ஸ் என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். இப்படத்தில், ''பேராபானி...'' என்ற ஒரு பாடல் காட்சி சமீபத்தில், தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரில் படமாக்கப்பட்டது. அப்போது அந்தபாடல் காட்சியில் அக்ஷ்ய், தன் கையால் விமானத்தை இழுத்து அசத்தியுள்ளார். அக்ஷ்ய் குமாரின் இந்த சாதனையை பார்த்து இயக்குநர் அபிஷேக் சர்மா உள்ளிட்ட ''தி ஷாக்கீன்ஸ்'' படக்குழுவினரே வியந்து பாராட்டி வருகின்றனர்.