ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஓவியர் ராஜா ரவி வர்மாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில், ரங் ரசியா என்ற படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் ரவி வர்மாவாக ரன்தீப் ஹூடா நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நந்தனா சென் நடித்துள்ளார். கேத்தன் மேத்தா இயக்கியுள்ளார். சுமார் 6 ஆண்டுகளாக உருவாகி வந்த இப்படம் தற்போது ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் பிரமாண்டமாக நடந்தது. பாடகர்கள் சுனிதி சவான், கைலாஷ் கெர், ரூப்குமார் ரத்தோடு உள்ளிட்ட பிரபல பாடகர்களின் பாடல்கள் உடன் இசை நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் பேசிய ஹீரோ ரன்தீப் ஹூடா, இந்தியாவின் முதல் பேஷன் டிசைனரே ராஜா ரவி வர்மா தான். எனக்குள் ராஜா ரவி வர்மா இருக்கிறார், ஆனால் நான் ராஜா ரவி வர்மா கிடையாது என்றார்.
இயக்குநர் கேத்தன் மேத்தா பேசுகையில், படம் இயக்குவது என்பது தொழிலாளர்களுடனான காதல் போன்றது. இந்தப்படத்திற்காக கிட்டத்தட்ட நான் ஐந்து ஆண்டுகள் கர்ப்பமாக இருந்ததை போன்று உணர்ந்தேன். தணிக்கை துறை அதிகாரிகளால் இந்தப்படம் ஐந்து ஆண்டுகள் தாமதமாகிவிட்டது. அவர்கள் நிறைய காட்சிகளை கட் செய்ய சொன்னார்கள், ஆனால் நான் மறுத்துவிட்டேன். ரிவைசிங் கமிட்டி மூலமாக இப்போது எந்த கட்டும் இல்லாமல் படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறேன் என்றார்.