ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பொய் சொல்லப் போறோம் படத்தின் மூலம் அறிமுகமானவர் பியா பாஜ்பாய். ஏகன், கோவா, பலே பாண்டியா, கோ, சட்டம் ஒரு இருட்டறை படங்களில் நடித்தார். தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும், ''நெருங்கி வா முத்தமிடாதே'', ''ஆமையும் முயலும்'' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். உத்திர பிரதேசத்தை சேர்ந்த பியா, மாடலிங்கிலிருந்து சினிமாவுக்கு வந்தவர். அவருக்கு இந்தி படத்தில் நடித்து பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்பது லட்சியம். அவர் நடித்த முதல் இந்திப் படமான மும்பை டில்லி மும்பை என்ற படம் வருகிற 26ம் தேதி ரிலீசாகிறது.
இந்தப் படத்தில் பியாவுக்கு ஜோடியகாக ஷிவ் பண்டிட் நடித்திருக்கிறார். சதீஷ் ராஜ்வடே இயக்கி உள்ளார். வியாகாம் 18 மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மும்பை பெண்ணான பியாவுக்கும், டில்லி பையனான ஷிவ் பண்டிட்டுக்கும் இடையில் வரும் காதல், மோதல் கதை. ரொமாண்டிக் காமெடி படம்.
இந்தப் படத்தின் வெற்றியை பொறுத்துதான் பியாவின் இந்தி பயணம் தொடரும். அதனால் அவரை பொறுத்தவரை இந்தப் படத்தின் ரிசல்ட், எக்ஸ்சாம் ரிசல்ட்டு மாதிரிதான்.