மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சாருதத் ஆச்சார்யா இயக்கத்தில், ரேகா சக்கரபார்த்தி நடித்துள்ள படம் சோனாலி கேபிள். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது. இந்நிலையில் ரேகா, படத்தின் புரொமோஷன்களில் சரிவர பங்கேற்காததால், படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 17ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரேகாவின் செய்திதொடர்பாளர் கூறியுள்ளதாவது, படத்தின் ரிலீஸ் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது உண்மை தான். சோனாலி கேபிள் படம் ரேகாவிற்கு முக்கியமான படம். தற்போது அவருக்கு ஏகப்பட்ட வேலைகள் இருப்பதாலும், ரித்தேஷ் ஷேமுக் உடன் நடித்து வரும் பேங்க் சோர் படப்பிடிப்பு காரணமாகவும், சோனாலி கேபிள் புரொமோஷன்களில் பங்கேற்க முடியவில்லை. ஆனாலும் ரேகா, சோனாலி கேபிள் தொடர்பான புரொமோஷன்களுக்கு தனது முழு ஒத்துழைப்பையும் கொடுப்பார் என்று கூறியுள்ளார்.