ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தோ-பிரன்ஞ் கூட்டு தயாரிப்பில் உருவாகும் முதல் படமான டிவைன் லவ்வர்ஸ் படத்தில் இர்பான் கானுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார் கங்கனா ரனாவத். கீழ்தட்டு நடுத்தரவர்க்கத்தில் வாழும் மக்களின் பின்புலத்தை கொண்டு இந்த படம் எடுக்கப்பட உள்ளது. இந்த படம் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் வெளியிடப்பட உள்ளது.
இந்த படம் பற்றி டைரக்டர் கூறுகையில், இந்த படம் இந்திய தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டுமில்லாது பிரான்ஸ் தொழில்நுட்ப கலைஞர்களாலும் உரவாக்கப்பட உள்ளது. பிரான்ஸ் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தத்துவியல் அறிஞர்களின் உதவியுடன் பாரம்பரியமான ஒரு இந்திய படமாக இப்படத்தை இயக்க உள்ளோம். ஹைலேஸ் ஆர்.சிங்குடன் இணைந்து இர்பான் கான் இந்த படத்தை தயாரிக்க உள்ளார் என தெரிவித்துள்ளார்.
படத்தின் இணை தயாரிப்பாளரான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லியோனார்ட் கூறுகையில், மிகவும் சிக்கலான ஒரு விஷயத்தை காமெடி கலந்து சொல்லியிருப்பதால் தான் இந்த கதையை எனக்கு பிடித்தது என கூறி உள்ளார். கங்கனா ரனாவத் கூறுகையில், இது போன்றதொரு கதையில் நடிப்பது ஒரு நடிகையாக மிகவும் சந்தோஷமாக உள்ளது. படபடக்க வைக்கும் இந்தியாவின் காதல் கதையை உலக சினிமா ரசிகர்கள் ரசிக்கும்படியாக இந்த படம் அமையும் என தெரிவித்துள்ளார்.
சாய் கபீர் இயக்கும் இந்த படம் 2015ம் ஆண்டு மார்ச் மாதம் ரிலீசாக உள்ளது.