ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பாலிவுட் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ராவிற்கு டுவிட்டரில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனை பயன்படுத்தி அவர் தனது ரசிகர்களுடன் இன்டராக்ட் செய்து வருகிறாராம். தனது ரசிகர்கள், தன்னை பற்றி டுவிட் செய்யும் கருத்துக்களுக்கு உடனே பதில் டுவிட் செய்கிறாராம்.
அதுமட்டுமின்றி ஒரு குறிப்பிட்டு கால இடைவெளியில் தனது லேட்டஸ்ட் போட்டோக்களையும் அவர் அப்லோட் செய்து வருகிறாராம். இதனால் அவரது டுவிட்டர் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம். தற்போது டுவிட்டரில் அவருக்கு 7 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்களாம். இந்த தகவலையும் அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளாரார்.
டுவிட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, அனைவருக்கும் நன்றி. எனது ரசிகர்கள் குடும்பம் விரிவடைந்து வருகிறது. உங்களது அன்பு தான் என்னை மேலும் முன்னேற வைக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். பிரியங்கா நடித்து சமீபத்தில் வெளியான மேரி கோம் படம் அவரது ரசிகர்களிடம் பெருத்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.
தற்போது பிரியங்கா சோப்ரா, தில் தடக்னே து, பஜ்ராவ் மஸ்தானி, மேடம்ஜி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.