பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ஐ' படம் தெலுங்கில் 'மனோகரடு' என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை சுமார் 30 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியுள்ளன. சில நாட்களுக்கு முன்னர் 'ஐ' படத்தின் இசை வெளியீடு ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரம்மாண்டமாக நடைபெற்றது. 'ஐ' படத்தின் தெலுங்குப் பதிப்பான 'மனோகரடு' படத்தின் இசை வெளியீடு அக்டோபர் மாதம் 2ம் தேதி வெளியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபல ஆக்ஷன் ஹீரோ ஜாக்கி சான் 'மனோகரடு' படத்தின் இசையை வெளியிட உள்ளதாக ஏற்கெனவே சொல்லப்பட்டது. ஆனால், அவர் வருவார் என்று இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை. இப்படித்தான் 'ஐ' படத்தின் இசை வெளியீட்டிற்கு அர்னால்ட்டுடன் பல தென்னிந்திய நடிகர்கள் வருவார்கள் என்று சொல்லப்பட்டது. கடைசியில் ரஜினிகாந்த், புனித் ராஜ்குமார் தவிர வேறு எந்த முக்கிய முன்னணி நடிகர்களும் கலந்து கொள்ளவில்லை.
'ஐ' படத்தின் டீஸருக்கும், பாடல்களுக்கும் ஏற்கெனவே அபாரமான வரவேற்பு கிடைத்துள்ளதால், தெலுங்கிலும் வெளியிடப்பட உள்ள படத்தின் பாடல்களுக்கும், டீஸருக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.