ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கருப்பு வெள்ளை காலத்தில் எல்லாம் நடிகையர்களுக்கும் பட்டப் பெயர்கள் இருக்கும். 'நடிகையர் திலகம்' சாவித்ரி, 'புன்னகை அரசி' கே.ஆர்.விஜயா என்றுதான் படங்களின் டைட்டிலில் போடுவார்கள். 'புரட்சித் தலைவர்', 'நடிகர் திலகம்', 'காதல் மன்னன்', 'இலட்சிய நடிகர்' என்று அந்தக் காலத்தில் நாயகர்களும் அழைக்கப்பட்ட போது நாயகிகளுக்கும் பட்டம் கொடுத்து ரசித்தது திரையுலகம். அதை ரசிகர்களும் அமோகமாக வரவேற்றார்கள். அதன் பின் 80களில் இருந்து இன்று வரை நாயகர்களுக்கு மட்டும்தான் பட்டப் பெயர்கள் நிலைத்து வருகிறது. அதில் ஒரு சிலர் அடிக்கடி மாற்றிக் கொண்டும் இருக்கிறார்கள். 'காதல் இளவரசன்' கமல்ஹாசன் 'உலக நாயகன்' ஆனால். 'சுப்ரீம் ஸ்டார்' சரத் குமார் 'புரட்சித் திலகம்' ஆனார். ஆனால், நாயகிகளுக்கு அதிகமான பட்டப் பெயர்களைச் சூட்டுவதும் அதை தொடர்வதும் இல்லாமலே போய் விட்டது.
சில வருடங்களுக்கு முன் சினேகாவைத்தான் புன்னகை இளவரசி என்று அழைத்தார்கள். இப்போதெல்லாம் பட்டப் பெயர் என்பது கூட கிண்டலடிக்கும் ஒன்றாக மாறி வருகிறது. ஏன் அந்த வழக்கத்தை தமிழில் கடைபிடிக்காமல் விட்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால், கன்னடத்தில் புதிய புயலை ஏற்படுத்தியுள்ள த்ரிஷாவிற்கு கன்னடத் தயாரிப்பாளர்கள் 'கோல்டன் லெக்' என்று பட்டம் சூட்டி அழைக்க ஆரம்பித்துவிட்டார்களாம். புனித் ராஜ்குமாருடன் அவர் இணைந்து நடித்துள்ள 'பவர்' படத்தின் மாபெரும் வெற்றியால், கன்னடத் தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து த்ரிஷாவை 'கோல்டன் லெக்' அதாவது அவரது தங்கக் காலடியால் கன்னட உலகம் பல படிகள் மேலே சென்றுவிட்டதாக மனமுவந்து பாராட்டுகிறார்களாம்.
30 வயதுக்கு மேல் எந்த ஒரு நடிகைக்கும் கிடைக்காத பெருமை, அதிலும் கன்னட உலகில் கிடைத்திருப்பது ஆச்சரியம்தான்.