பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
தெலுங்குத் திரையுலகில் ஒரே சமயத்தில் மிகப் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இரண்டு படங்கள் 'ருத்ரமா தேவி, பாகுபலி'. இரண்டு சரித்திரப் படங்களிலும் நாயகியாக நடிப்பவர் அனுஷ்கா. 'ருத்ரமாதேவி' படத்தை 'ஒக்கடு' புகழ் குணசேகர் இயக்க, 'பாகுபலி' படத்தை 'நான் ஈ' புகழ் ராஜமௌலி இயக்கி வருகிறார். இதில் 'ருத்ரமாதேவி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 'பாகுபலி' படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
'ருத்ரமாதேவி' படத்தின் அடுத்த விளம்பரப்படுத்தும் திட்டமாக படத்தின் டீஸரை விஜயதசமியன்று வெளியிட இருக்கிறார்களாம். இதுவரை இந்தப் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமாக ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே வெளியிடப்பட்டிருக்கிறது. ஒரு சிம்மாசனத்தில் அனுஷ்கா கம்பீரமாக உட்கார்ந்திருப்பது போன்ற அந்த புகைப்படமே படத்தின் வலிமையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என அப்போதிலிருந்தே பேச்சு இருந்து வருகிறது. இப்போது படத்தின் முதல் பார்வை டீஸரை உருவாக்கி வருகிறார்களாம். இந்தியத் திரையுலகின் திறமையான இசையமைப்பாளர்களில் ஒருவரான இளையராஜாவின் இசையில் இப்படத்தின் இசைக் கோர்ப்புப் பணிகளும் நடந்து கொண்டிருக்கிறது. டீஸருக்கும் அவர் தனிக் கவனம் செலுத்தி வருகிறாராம்.
இந்தியாவின் முதல் ஸ்டீரியோஸ்கோபிக் 3டி படமான 'பாகுபலி' படத்தின் டீஸர் கண்டிப்பாக மிரட்டலாக இருக்கும் என இப்போதே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இப்படம் தமிழிலும் வெளியாக உள்ளது.