ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
3 இடியட்ஸ் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் சர்மான் ஜோஷி. இவர் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை யூ-டியூப்பில் வெளியிட்டுள்ளார். அதில் தாய்மையை போற்றும் விதத்தில் குறும்படமாக அந்த வீடியோ படமாக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், ஒருவருக்கு அவரது அம்மா போன் செய்கிறார், அந்த நபரோ நான் வேலையில் இருக்கிறேன் என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்று கூறி போனை கட் செய்து விடுகிறார். இதை பார்க்கும் சர்மான் ஜோஷி, அம்மாவின் சிறப்பையும், அவர்கள் நம்மை எப்படி எல்லாம் பார்த்து பார்த்து வளர்த்தார்கள் என்பதையும் சக நண்பர்களுக்கு எடுத்துரைக்கிறார். சர்மானின் பேச்சை கேட்டதும், அந்த நபர் உடனே தன் அம்மாவிற்கு போன் செய்கிறார். கூடவே மற்றொரு பெண், தன் அம்மாவை ரொம்பவே மிஸ் பண்ணுவதாக கண்கலங்குகிறார். சர்மானின் இந்த வீடியோ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து சர்மான் ஜோஷி கூறியுள்ளதாவது, இன்றைய தேதியில் பலர், அன்னையர் தினத்தன்று மட்டுமே அவர்களது அம்மாவை கொண்டாடுகிறார்கள், அன்று ஏதாவது செய்கிறார்கள். இந்த குறும்படம் மூலம் நான் எல்லோருக்கும் ஒன்றை சொல்ல விரும்பினேன். அதாவது, அம்மாவிடம் அன்பை செலுத்த அதற்கு என்று தனியாக ஒரு நாள் கிடையாது, அம்மாவிடம் அன்பை செலுத்த எல்லா நாளும் அன்னையர் தினம் தான். இந்த வீடியோவை நான் எனது அம்மாவுக்கு மட்டுமின்றி, இந்த உலகத்தில் உள்ள அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் என்று கூறியுள்ளார்.