ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தியாவின் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம். இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிவிட்ட நிலையிலும் தளராது பயிற்சி செய்து உலக அளவில் பதக்கங்களை குவித்தவர். இவரது வாழ்க்கை வரலாறு அவரது பெயரிலேயே மேரி கோம் என்ற இந்தி திரைப்படமாக உருவாகி உள்ளது.
பாலிவுட்டின் கனவு கன்னி பிரியங்கா சோப்ரா மேரிகோமிடம் பயிற்சி பெற்று இதில் மேரிகோமாக நடித்துள்ளார். படம் வருகிற 5ந் தேதி வெளிவருகிறது. இந்தியா முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்துக்கு உ.பி. அரசாங்கம் வரிவிலக்கு அறிவித்துள்ளது. இந்திய வீராங்கனை மேரிகோமை கவுரவிக்கும் விதமாக இந்த வரிவிலக்கை அளிப்பதாக அரசு கூறியுள்ளது.
வரிவிலக்கு என்றால் தமிழ்நாடு போல தயாரிப்பாளருக்கு பணம் போகாது. மக்கள் குறைந்த கட்டணத்தில் படத்தை பார்க்கலாம். இதற்கிடையில் ஊர்ஊராக சென்று மேரிகோமை புரமோட் பண்ணி வரும் பிரியங்கா சோப்ரா "இந்தப் படத்தை எனக்கு கற்றுக்கொடுத்து குருக்களுக்கு குருகாணிக்கையாக சமர்ப்பிக்கிறேன்" என்று அறிவித்திருக்கிறார்.