ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பாஸ் என்ற படத்தில் நடிக்கிறார். விரைவில் அந்த படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தை விளம்பரப்படுத்துவதற்காக படக்குழுவினர் புது ஐடியாவை செயல்படுத்தியுள்ளனர். இந்த படத்தின் டைட்டிலின்போது விநாயகருக்கு பெருமை சேர்க்கும் வகையிலான பாடல் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் ஆடியோ சிடிக்களை மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி மண்டல்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு நேரடியாக சென்று இலவசமாக வழங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
அக்ஷய் குமார் கூறுகையில், விநாயகர் சதுர்த்தி அன்றுதான் எனக்கு பிறந்தநாள். எனவே என் பிறந்த நாளுக்காக ரசிகர்களுக்கு இந்த சிடியை வழங்குகிறோம். விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியது மாதிரியும் ஆயிற்று; படத்துக்கு விளம்பரம் செய்தது மாதிரியும் ஆயிற்று என்கிறார்.