ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
காதலும், காமெடியும் கலந்த, காக்டெயில் கலாட்டா, இது. இப்போது, புகழ்
வெளிச்சத்தில் இல்லாத, சன்னி தியோல் தான், படத்தின் ஹீரோ. அவருடன் ஜோடி
சேர்ந்திருப்பது, கங்கனா ரனாவத். புத்தாண்டுக்கு இரண்டு நாட்களுக்கு முன்
சந்திக்கும், ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் நடக்கும், கல கலப்பான சம்பவங்கள்
தான், படத்தின் கதை. இந்த படத்தில், பாடல்களும், முக்கிய அம்சமாக
கருதப்படுவதால், இசையமைப்பாளர் ப்ரீத்தம், மெல்லிய மெலோடிகளால், ரசிகர்களை
தாலாட்டியுள்ளார். ராதிகா ராவ் - வினய் சப்ரு என, படத்துக்கு இரண்டு
இயக்குனர்கள் உள்ளனர். இந்த படத்தின் மூலம், தனக்கு, பாலிவுட்டில் மறு
வாழ்வு கிடைக்கும் என, சன்னி தியோல், பெரிதும் நம்புகிறார்.