ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கலைத்துறையில் சிறப்பாக சேவையாற்றியதற்காக மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் 5ம் தேதி நடந்த விழாவில் பாலிவுட் நடிகை ஸ்ரீதேவிக்கும், நடிகை ஷர்மிளா தாகூருக்கு பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்ட நிலையில் இன்று(20.40.13) இரண்டாம் கட்டமாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.
டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த இதற்கான விழாவில், இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் மறைந்த பாலிவுட் நடிகர் ராஜேஷ் கண்ணாவிற்கு பத்மபூஷன் விருதினை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். அவர் சார்பாக இவ்விருதினை அவரது மனைவி டிம்பிள் கபாடியா பெற்றுக் கொண்டார். அதேப்போல் மறைந்த பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜஷ்பல் பட்டிக்கும் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. அவருக்கு பதிலாக அவரது மனைவி சவிதா இவ்விருதினை பெற்றுக் கொண்டார். இவர்கள் தவிர டைரக்டர் ரமேஷ் சிப்பி, நடிகர் நானா படேகர், பாடகி சுதா மல்கோத்ரா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.