ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்ட பின்னும், கரீனா கபூருக்கு, நடிப்பு ஆர்வம் குறையவில்லை. பாலிவுட்டில், தொடர்ந்து, பிசியாகவே வலம் வருகிறார். விளம்பரங்களிலும், அதிகம் தலைகாட்டுகிறார். தென் மாநிலங்களில் பிரபலமான, நகை கடை நிறுவனம், தன், விளம்பர மாடலாக, கரீனாவை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த விளம்பரங்களில், கண்களை பறிக்கும் அளவுக்கு, நகைகளை அணிந்து, ஜொலி ஜொலிக்கிறார், கரீனா. இந்த நிறுவனத்தின் போட்டி நிறுவனம், ஏற்கனவே, ஐஸ்வர்யா பச்சனை, ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு போட்டியாகத் தான், கரீனாவை களமிறக்கியுள்ளனர். ஐஸ்வர்யாவுக்கும், கரீனாவுக்கும் இடையே நடக்கும், தங்க வேட்டையில், யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பதை, பொறுத்திருந்து பார்ப்போம்.