ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கோடம்பாக்கத்தை காலி செய்து விட்டு, பாலிவுட்பக்கம் சென்ற அசின், இதுவரை இந்தியில், மூன்று படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களில்,அவருக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை என்றாலும், மூன்று படங்களுமே, வசூலை குவித்தன. இதுபற்றி அசினிடம் கேட்டால்,"நான், நடித்த படங்கள் அனைத்துமே, 100 கோடி ரூபாய்க்கு மேல், வசூலை குவித்தவை. நான், 100 கோடி ரூபாய் நட்சத்திர பட்டியலில் இருக்கிறேன் என, பெருமையாக கூறுகிறார். ஆனால், சக நடிகையான, பிபாஷாவுக்கு, அசின் மீது, என்ன காட்டமோ தெரியவில்லை.
சமீபத்தில், அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில்,"இப்போதெல்லாம், ஒரு சில நடிகைகள், ஓரிரண்டு படங்களில், துக்கடா வேடங்களில் தலையை காட்டி விட்டு, 100 கோடி ரூபாய் கிளப், 10 ரூபாய் கோடி கிளப் என, கலர், கலராக ரீல் விடுகின்றனர். ஊறுகாய் வேடத்தில் நடித்து விட்டு, எதற்கு இப்படி பெருமையடித்துக் கொள்கிறார்களோ தெரியவில்லை என, வெடித்துள்ளார். இதைக் கேள்விப்பட்டதிலிருந்து, பிபாஷா மீது, கடும் கோபத்தில் இருக்கிறாராம், அசின்.