Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

நகைச்சுவை பெயரில் ஆபாசம்! டில்லி கணேஷ் ஆதங்கம்!!

24 மார், 2013 - 16:57 IST
எழுத்தின் அளவு:

ஓரிரு சினிமாக்களில் தலைகாட்டினாலே, தலைக்கனத்துடன் நடிகர்கள் பந்தா காட்டும் காலமிது. நகைச்சுவை, குணசித்திரம், வில்லன், ஹீரோ என அனைத்து கேரக்டர்களிலும் கலக்கியவர் இவர். 500க்கும் மேற்பட்ட சினிமாக்களில் நடித்தவர். இயக்குனர்கள் கதையை விளக்கும் போதே கதாபாத்திரமாகவே ஒன்றி விடுவது இவரது சிறப்பு. இவரது நடிப்பில் சிறிதும் செயற்கை தன்மையை காண முடியாது. இப்பெருமைகளுக்கு சொந்தக்காரர் "டில்லி கணேஷ்... மதுரை வந்தவருடன், உங்களுக்காக பேசியதிலிருந்து...

* மதுரையை பிடிக்குமா?

என் வாழ்வாதாரமே மதுரை தான். நெல்லை சொந்த ஊர் என்றாலும் கூட, பழங்காநத்தத்தில் தங்கிதான் டி.வி.எஸ்., நிறுவனத்தில் வேலை செய்தேன். இங்கிருந்து தான் விமான படையிலும் சேர்ந்தேன்.

* விமானப்படை வீரர், நடிகரானது எப்படி?

விமான படையில் பணிபுரிந்த போது, இந்தியா-பாகிஸ்தான் போர் மூண்ட காலகட்டம். போரில் காயமுற்று, சிகிச்சை பெற்ற வீரர்களுக்காக கலை நிகழ்ச்சிகள் ஒவ்வொரு மொழியிலும் நடந்தன. தமிழில் "நவீன வள்ளி திருமணம் நாடகத்தில் நடிக்க நண்பர்கள் வற்புறுத்தினர். வேறுவழியின்றி, மேடை ஏறினேன். கை, கால் நடுங்க...வாய்க்கு வந்தபடி உளற...அதுவே சிறந்த நகைச்சுவையாக அமைந்தது. அதை பின்பற்றி நகைச்சுவை பாத்திரங்களில் நடிக்க துவங்கினேன்.

* சினிமா பிரவேசம் எப்போது?

காத்தாடி ராமமூர்த்தி மூலம் நாடகங்களில் நடித்த போது, என் நடிப்பை பார்த்து இயக்குனர் பாலசந்தர்தான், "பட்டினப்பிரவேசம் படத்தில் நடிக்க வைத்தார்.

* "டில்லி எப்படி ஒட்டிக்கொண்டது?

பாலசந்தர் உபயம். டில்லியில் இருந்து வந்ததால், பெயருடன் சேர்த்து அவர் அழைக்க துவங்க, அதுவே நிலைத்து விட்டது.

* நடித்த கதாபாத்திரங்களில் பிடித்தது?

"பசி படத்தில் சென்னை ரிக்ஷா தொழிலாளி கதாபாத்திரம். என் நடிப்பை மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., பாராட்டியது மறக்க முடியாதது. "சிந்து பைரவியில் நடித்த கேரக்டரும் பிடிக்கும். கமல் சினிமாக்களில் தவறாமல் இடம் பெற்று விடுகிறீர்களே... ராஜபார்வை சினிமாவின் போதுதான் முதன் முதலாக கமலை சந்தித்தேன். அவரிடம், "நான் உங்கள் ரசிகன், என்றேன். அவரோ, "நான் தான் உங்கள் ரசிகன், என்றார். அன்று துவங்கிய நட்பு, அபூர்வ சகோதரர்கள், நாயகன், மைக்கேல் மதன காமராஜன், தெனாலி என தொடர்கிறது.

* நகைச்சுவை, குணசித்திர நடிகர், ஹீரோவானது எப்படி?

இயக்குனர் இப்ராகிம் தயாரித்த "தணியாத தாகம் படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்தார். "எங்கம்மா மகாராணி உட்பட ஓரிரு படங்களில் ஹீரோ வேஷம் கட்டியுள்ளேன்.

* வில்லனாகவும் கலக்கியுள்ளீர்களே...?

"அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல் கூறியபடி வில்லனாக நடித்தேன். மக்கள் திட்டும்படி கொடூரமாக நடிக்கும்படி கேட்டார். அதன்படி நடித்தது பாராட்டை பெற்றது. "சிதம்பர ரகசியம் படத்தில் இயக்குனர் விசு, வில்லன் கேரக்டர் இறுதி வரை தெரியக்கூடாது என்பதற்காக குணசித்திர நடிகராக திகழ்ந்த என்னை வில்லனாக்கினார்.

* பிடித்த நகைச்சுவை நடிகர், நடிகைகள்?

அப்போ நாகேஷ், இப்போ வடிவேலு... நடிகைகளில் நம்ம மனோரமாவை மிஞ்ச ஆள் ஏது?

* தற்போதும் நடிக்கிறீர்களா?

"கேடி ரங்கா, கில்லாடி பில்லாவில் நடித்து வருகிறேன். கமல் முதல் இன்றைய தலைமுறை விமல் வரை நடித்து விட்டேன்.

* தற்போதைய சினிமாக்களில் நகைச்சுவை குறித்து...?

சரியான காமெடி டிராக்குகள் அரிதாகவுள்ளன. நகைச்சுவை பெயரில் ஆபாசத்தை காட்டுகின்றனர். சினிமாவில் நல்ல காமெடிகள் இடம் பெற வேண்டும்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

LION Bala - Tuticorin,இந்தியா
27 மார், 2013 - 11:44 Report Abuse
LION Bala வடிவேல் மீண்டும் நடிக்க வரவேண்டும், வெள்ளி திரையில் அவருடைய காமடிநிகழ்ச்சியை நாம் ரசிக்க வேண்டும். சிறந்த ஓர் கலைங்கணனை நாம் தவிர்த்து விடகூடாது.
Rate this:
Arul - Brisbane  ( Posted via: Dinamalar Windows App )
25 மார், 2013 - 12:46 Report Abuse
Arul வடிவேலு வரணும் வேற வழி என்ன his comedy was decent and good always
Rate this:
LAX - Trichy,இந்தியா
25 மார், 2013 - 11:44 Report Abuse
LAX கடைசி கேள்வியும் அதற்கான டெல்லி கணேஷ் அவர்களின் பதிலும் உண்மை அருமை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in