சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
இந்திப்படம் ஒன்றில் ப்ரியங்கா சோப்ராவின் குத்துப்பாட்டு இடம்பெற்றதால் அந்த படத்திற்கு ஏ சான்று கொடுத்து படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது சென்சார் போர்டு. பாலிவுட்டில் பப்ளி பத்மாஷ் என்ற படத்தில் பிரியங்கா சோப்ராவின் ஐட்டம் பாடல் வைக்கப்பட்டது. இப்படம் சென்சார் அதிகாரிகளுக்கு திரையிடப்பட்டது. கவர்ச்சி குத்து பாடல் இருப்பதால் ஏ சான்றிதழ் தந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
படத்தின் தயாரிப்பாளர் தனுஜ் கார்க் கூறும்போது, படத்தில் ஐட்டம் சாங் இருப்பதால் ஏ சான்று தருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இப்படியொரு விதி தணிக்கை குழுவில் இருப்பது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ஏ சர்டிபிகேட் பெறும்படத்தை டி.வியில் திரையிட முடியாத சூழல் இருக்கிறது. மேலும் பிரைம் டைமில் குறிப்பிட்ட பாடல்களையும் டிவியில் ஒளிபரப்ப முடியாது. இது பட வியாபாரத்தை பாதிக்கிறது, என்றார்.