ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டில், இப்போதெல்லாம், காமெடி படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க துவங்கி விட்டனர். பெரிய நடிகர்களை வைத்து, மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரித்த, பல படங்கள், மண்ணை கவ்வுகின்றன. இதனால், சிறிய நடிகர்களை வைத்து, குறைந்த பட்ஜெட்டில், ஓரளவு லாபம் பார்ப்பதற்கு, காமெடி படங்களே சிறந்தது என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். அந்த வரிசையில் விரைவில் வெளியாகவுள்ள படம் தான், "மேரே டாட் கி மாருதி. இந்த படத்தின் ஹீரோ, தன் தந்தைக்கு தெரியாமல், அவரின் காரை எடுத்துக் கொண்டு, தன் காதலியை பார்ப்பதற்காக, ஒரு திருமணத்துக்கு செல்கிறான். அங்கு, அந்த கார், காணாமல் போய் விடுகிறது. இதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை, சிரித்து சிரித்து, வயிறு புண்ணாகும் அளவுக்கு, படமாக்கியுள்ளனர். அஷிமா ஷிப்பா இயக்கியுள்ள இந்த படத்தில், ஷாகிப் சலீம், ரேகா சக்ரவர்த்தி, ராம் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.