ப்ரியா வாரியருக்கு இது நல்ல நேரம்! : மஞ்சிமா மோகன் | எங்களுக்கும் பொறுப்பு இருக்கு! | கிராமத்திலும் சுற்றுலா கொண்டாடலாம்! | தீபிகா காதில் ரன்பீர் ரகசியம்? | திரைப்பட இயக்குனர்கள் முதல்வருடன் சந்திப்பு | சீனாவில் ஐமேக்ஸில் பாகுபலி 2 | எம்.எஸ்.ராஜேஸ்வரியை மறந்த தமிழ்த் திரையுலகம் | 'அர்ஜுன் ரெட்டி' ஹிந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் | மீண்டும் சமுத்திரகனி இயக்கத்தில் அமலாபால் - நானி | மோகன்லால் தவிர்க்கிறார் : தேசியவிருது இயக்குனர் வருத்தம் |
இந்த படத்தின் ஹீரோ, ஒருவித மன நோயால் பாதிக்கப்பட்டவர். இதன் காரணமாக, தன் வீடு, வேலை, மனைவி, என, அனைத்தையும், அவர் இழக்க நேரிடுகிறது. வயதான, தன் தாய், தந்தையர் ஆதரவுடன், ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, எட்டு மாதங்களுக்கு பின், குணமடைந்து திரும்புகிறார். அப்போது தான், தனக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் பற்றி, அவருக்கு தெரிய வருகிறது. இழந்தவற்றை, மீண்டும் அடைவதற்காக, மருத்துவமனையில், தன்னுடன் சிகிச்சை பெற்று வந்த நண்பரின் உதவியுடன், களம் இறங்குகிறார். அங்கே, அவர், ஏராளமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த சவால்களை முறியடித்து, இழந்தவற்றை திரும்ப பெறுகிறாரா என்பதை, த்ரில்லிங்காகவும், சுவாரசியமாகவும், விளக்கியுள்ளார், இயக்குனர், டேவிட் ஒ ரஸல். பிராட்லி கூப்பர், ராபர்ட் நீரோ, ஜெனிபர் லாரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம், இந்தியாவில், விரைவில் திரைக்கு வரவுள்ளது.