பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ராஜீவ் மேனன் மறைந்த இசை மேதை பாரதரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கையை திரைக்கதையாக எழுதி வருகிறார். பெரும் பொருட் செலவில் அதனை தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கில மொழிகளில் படமாக்க முயற்சித்து வருகிறார். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கையில் அவரது கணவர் சதாசிவம், மூதறிஞர் ராஜாஜி, ஜவஹர்லால் நேரு போன்றவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அந்த கேரக்டரில் யார் யாரை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்து அவர்களிடம் அனுமதி பெற்று வருகிறார் ராஜீவ் மேனன். அந்த வரிசையில் எம்.எஸ்.சுப்புலட்சுமியாக நடிக்க வித்யாபாலனை டிக் செய்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரை சந்தித்து கதையைக்கூறி நடிக்க இயலுமா என்று கேட்டிருக்கிறார். "சில்க் சுமிதாவின் கேரக்டரில் நடித்து விட்டு புனிதமான அந்த அம்மா கேரக்டரில் நடிக்க முடியுமா?" என்று யோசித்துச் சொல்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது. ஆனால் அவர் நடிக்கும் ஆசையில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இது தொடர்பான எந்த தகவலும் இதுவரை அதிகாரபூர்வமாக வெளிவரவில்லை.