Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

காதலுக்கு வயது கிடையாது! 36 வயதுள்ள வரை மணக்கும் 61வயது ஜீனத் அமன் சொல்கிறார்!!

07 பிப்,2013 - 12:39 IST
எழுத்தின் அளவு:

பாலிவுட்டின் பழம்பெரும் கவர்ச்சி நடிகை, ஜீனத் அமன், 61, தன்னை விட, 25 வயது குறைந்த, மகன் வயதில் உள்ள தொழிலதிபரை, திருமணம் செய்ய உள்ளார். இந்த பொருந்தா திருமணம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியவர்களிடம், ""காதலுக்கு வயது கிடையாது. காதலித்து பாருங்கள்; உங்களுக்கும் அந்த உண்மை தெரியும், என்கிறார்.

பாலிவுட் படவுலகை, கிறங்கடிக்கும் தன் அழகால் கட்டி போட்டவர், ஜீனத் அமன். 1970ம் ஆண்டுகள் துவங்கி, 90ம் ஆண்டுகள் வரை, பாலிவுட் படங்களில், மிகக் குறைந்த ஆடைகளுடன், அவர் ஆடிய கவர்ச்சி நடனங்களுக்கும், அவர் கண் அசைவிற்கும், உடல் நளினத்திற்கும் அடிமையான ரசிகர்கள் ஏராளம்.கோடிக்கணக்கில் பணம் சேர்ந்தாலும், நல்ல வாழ்க்கை அவருக்கு அமையவில்லை. அவரை மணக்கவும், துணையாக சேர்த்துக் கொள்ளவும், தேவ் ஆனந்த், ராஜ் கபூர் போன்ற நடிகர்களும், மிகப் பெரிய தொழிலதிபர்களும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் போன்றவர்களும் முன்வந்தனர் என, இப்போதும் சொல்லப்படுகிறது. எனினும், மசார் கான் என்ற, சில படங்களில் மட்டும் தலைகாட்டியவரை, 1985ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமண வாழ்க்கை நிம்மதியாக இல்லை. திடீரென ஒரு நாள், பத்திரிகையாளர்களை அழைத்து, மசார் கானுடனான தன் திருமண வாழ்க்கை முறிந்து விட்டதாக அறிவித்து, முறைப்படி விவாகரத்தும் பெற்று விட்டார்.

ஓட்டலில், பாலிவுட் நடிகர் சஞ்சய் கானுடன் ஏற்பட்ட தகராறில், சஞ்சய் கான் தாக்கியதில், ஒரு கண் பார்வையை இழந்த ஜீனத் அமன், தன் இரு மகன்கள், அசான், 26, மற்றும் ஜகான், 23, ஆகியோருடன், மும்பையில் வாழ்ந்து வருகிறார். கடந்த, 2011ம் ஆண்டு, புனே நகரில் நடந்த திரைப்பட விழாவில் பங்கேற்ற ஜீனத், தற்செயலாக, 36 வயது தொழிலதிபரை சந்தித்தார். பார்த்த உடனேயே, இரு மனங்களும் இணைந்தன. அந்த சந்திப்பு தான், இப்போது திருமணம் வரை சென்றுள்ளது. தாயின் புரட்சிகர திருமணத்திற்கு, மகன்கள் இருவரும், பூரண ஆசி வழங்கியுள்ளனர். தங்கள் வயதை விட, 10 வயது தான், தங்கள் தந்தைக்கு அதிகம் என்ற போதிலும், தாய் ஜீனத் சந்தோஷமாக இருந்தால் போதும் என்கின்றனர், இரு மகன்களும்.

"இந்த வயதில் காதலா... என, ஜீனத் அமனிடம் நிருபர் ஒருவர் கேட்க, ""காதலுக்கு வயது கிடையாது. மனம் தொடர்பானது அது. உடலுக்கும், அதற்கும் சம்பந்தமில்லை. எந்த வயதிலும் காதல் வரும். நீங்களும் காதலித்து பாருங்கள்; உண்மை தெரிய வரும், என்றார். எனினும், தன் இளம் காதலர் பற்றியோ, திருமணம் எப்போது என்பது குறித்தோ, அவர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.இதற்கிடையே, ஜீனத் அமனை சந்தித்த சில செய்தியாளர்களிடம் பேசிய அவர், ""நான் காதலிப்பது உண்மை தான். திருமணம் செய்யும் எண்ணமில்லை. குறைந்தபட்சம் இப்போதைக்கு திருமணம் செய்ய மாட்டேன். எந்த முடிவும் நான் இன்னும் எடுக்கவில்லை, என்று கூறினார்.

Advertisement
5கோடி கேட்கிறார் சோனாக்ஷி:தயாரிப்பாளர்கள் அலறல்5கோடி கேட்கிறார் ... எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை சினிமாவாகிறது: வித்யாபாலன் நடிக்கிறார் எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை ...

வாசகர் கருத்து

எஸ்.பானு - gummudipundi,இந்தியா
09 பிப்,2013 - 00:04
 எஸ்.பானு காதலா? இது காமம். நீனு ஏன் ஒரு 80 வயது கிழவரை காதலிக்க கூடாது?
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
08 பிப்,2013 - 00:00
 GUNAVENDHAN நினைத்த மாத்திரத்தில் யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து கூத்தடிக்கும் , இவரெல்லாம் காதலை பற்றியெல்லாம் பேசகூடாது. திருமணம் என்பதெல்லாம் இவருக்கெல்லாம் தேவையா?. யாருடன் இவர் வாழ்ந்தாலும் யாரும் இவரை கேள்வி கேட்கபோவதில்லை.
Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Sowgarpettai
    • சவுகார்பேட்டை
    • நடிகர் : ஸ்ரீகாந்த்
    • நடிகை : லட்சுமி ராய்
    • இயக்குனர் :வி.சி.வடிவுடையான்
    Tamil New Film Salaiyoram
    • சாலையோரம்
    • நடிகர் : ராஜ் (புதுமுகம்)
    • நடிகை : செரீனா (புதுமுகம்)
    • இயக்குனர் :க.மூர்த்திகண்ணன்
    Tamil New Film Sivappu manidhargal
    Tamil New Film Sarithiram Pesu

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in