Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » பாலிவுட் செய்திகள் »

சோனம் கபூரின் தயக்கம்

Sonam Kapoors reluctance தெலுங்கு திரையுலகின் இளம் தலைமுறை நடிகர், மகேஷ் பாபு நடித்த, "தொக்குடு, பிசினஸ்மேன், சீதம்மா ஆகிய படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று, ஹாட்ரிக் அடித்துள்ளன. இந்த மகிழ்ச்சியோடு, "ஆகடு என்ற படத்தில், நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார், மகேஷ் பாபு. இதில், இவருக்கு ஜோடியாக, பாலிவுட் சாக்லேட், சோனம் கபூர்  நடிப்பதாக, முதலில் தகவல்கள் வெளியாகின.சோனம் கபூர், பாலிவுட் மாஜி ஹீரோ, அனில் கபூரின் செல்ல மகள். "ஆயிஷா, டில்லி 6 <உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், தற்போது தனுஷ் ஜோடியாக, ஒரு இந்தி படத்தில் நடித்து வருகிறார். சோனாக்ஷி சின்கா, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள், தெலுங்கில் கால் பதித்துள்ளதால், அவர்களை போலவே, சோனம் கபூரும், தெலுங்கில் நுழைய திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.ஆனால், இந்த தகவலை மறுத்துள்ளார், சோனம். "தெலுங்கில், இப்போதைக்கு நடிக்கும் எண்ணம் எதுவும் இல்லை. சரியான நேரமும், நல்ல கதையம்சமும் கொண்ட படம் கிடைக்கும்போது, மற்ற மொழிகளில் நடிப்பேன் என,கூறியுள்ளாராம், சோனம் கபூர்.

Tags »
Sonam Kapoor
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in