ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
"தி வெனஸ்டே என்ற, பரபரப்பான திரைப்படத்தை இயக்கி, பாலிவுட் ரசிகர்களின் பாராட்டை பெற்ற, நீரஜ் பாண்டே இயக்கியுள்ள படம் இது. 1987ல், மும்பையில், மிகவும் பிசியான, நகை கடை பஜாரில் இருந்த பிரபலமான நகை கடைக்குள், 26 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. "வருமான வரித் துறை அதிகாரிகள் என, தங்களை அடையாளப் படுத்திக் கொண்ட அந்த கும்பல், நகை கடையில் சோதனையிடுவது போல், நடித்து, அங்குள்ள, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை அபேஸ் செய்து சென்றது. இந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, "ஸ்பெஷல் சப்பீஷ் படத்தை இயக்கியுள்ளார், நீரஜ் பாண்டே. 26 பேர் கொண்ட, கொள்ளை கும்பலின் தலைவனாக, பாலிவுட்டின் அதிரடி நடிகர், அக்ஷய் குமாரும், அவரின் காதலியாக, காஜல் அகர்வாலும் நடித்துள்ளனர். பரபரப்பான திருப்பங்களையும், அதிரடியான சண்டை காட்சிகளையும் கொண்ட இந்த படம், விரைவில் திரைக்கு வருகிறது.