Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இந்தி துப்பாக்கியில் சோனாக்ஷி! கோபத்தில் அசின்!!

05 ஜன,2013 - 14:51 IST
எழுத்தின் அளவு:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினிஇந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதித்தவர் அசின். அந்த படத்திற்கு பிறகு முழுநேர இந்தி நடிகையாகி விட்டதால், தென்னிந்திய படங்களை ஓரங்கட்டினார். இந்த நிலையில், சமீபகாலமாக அசின் நடித்த படங்களில் தோல்வியை அவரது மார்க்கெட்டை சரித்திருக்கிறது. அதனால் நல்ல கதைகளுக்கான தேர்வில் தீவிரமடைந்திருக்கும அசின், தமிழில் வெளியான துப்பாக்கி படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் ரீமேக் செய்கிறார் என்பதை கேள்விப்பட்டு அவரிடம் நாடிச்சென்று மீண்டும் சான்ஸ் கேட்டிருக்கிறார்.

ஆனால் அவர் அதற்கு சம்மதம் சொல்வது போல் நிலைமை இருந்தாலும், படத்தில் நாயகனாக நடிக்கும் அக்ஷய்குமாரோ அசின் நாயகி என்றதும் முகத்தை வெடுக்கென்று திருப்பிக்கொண்டாராம். எனக்கு அவர் பொருத்தமான நடிகை இல்லை. அதனால் தொடர்ந்து எனது வெற்றிப்படங்களில் நடித்த சோனாக்ஷி சின்ஹாதான் இந்த படத்திலும் நடிக்க வேண்டும் என்று உறுதிபட சொல்லி விட்டாராம். இதனால் அசினுக்காக ஹீரோவுடன் மல்லுக்கட்ட வேண்டாம் என்று நினைத்த முருகதாசும், அசினை மறுபேச்சின்றி ஓரங்கட்டிவிட்டாராம். அதனால் இப்போது சோனாக்ஷி மீது கோபத்தை திருப்பியிருக்கிறாராம் அசின். அதோடு அவரை அக்ஷய்குமாருடன் இணைத்து தவறான கிசுகிசுக்களையும் தீவிரமாக பரப்பி விட்டு டென்சன் பண்ணி வருகிறாராம்.

Advertisement
பிரபுதேவா படத்தில் தீபிகா!பிரபுதேவா படத்தில் தீபிகா! பாலிவுட்டை கலக்க சார்மி ரெடி பாலிவுட்டை கலக்க சார்மி ரெடி

வாசகர் கருத்து

அசோக் குமார் - Trichy,இந்தியா
11 ஜன,2013 - 08:47
 அசோக் குமார் என்னதான் இருந்தாலும் கேவலமான முக சேட்டைகள் செய்வதில் அசினுக்கு நிகர் அசினே!
M.Pala - Kuala Lumpur,மலேஷியா
10 ஜன,2013 - 06:32
 M.Pala தயவு செய்து சான்ஸ் கொடுக்கவேணாம் .
Mokkai Mohan - Delhi,இந்தியா
07 ஜன,2013 - 09:19
 Mokkai Mohan உனக்கு அப்படியே சான்ஸ் கொடுத்துடாலும் !!!
அசோக் குமார் - Trichy,இந்தியா
05 ஜன,2013 - 22:13
 அசோக் குமார் இவரை இந்தியில் சேர்த்து கொண்டதை வைத்தே இந்தி படங்களின் லட்சணத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.
Advertisement
தொடர்புடைய படங்கள்
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Enakku veeru engum kilaigal kidaiyathu
    Tamil New Film Strawberry
    • ஸ்ட்ராபெர்ரி
    • நடிகர் : பா.விஜய்
    • நடிகை : அவ்னி மோடி
    • இயக்குனர் :பா.விஜய்
    Tamil New Film Puriyatha Anandham Puthithaga Arambam
    Tamil New Film Irandu manam vendum

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in