ஓட்டலில் அடிதடி! சயீப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் - Saif Ali Khan chargesheeted for hotel brawl
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஓட்டலில் அடிதடி! சயீப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

22 டிச,2012 - 13:00 IST
எழுத்தின் அளவு:

மும்பை நட்சத்திர ஓட்டலில், தகராறில் ஈடுபட்டு, வர்த்தகர் ஒருவரை தாக்கிய வழக்கில், பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் மீது, மும்பை போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான், சில மாதங்களுக்கு முன், நடிகை கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் காதலர்களாக இருந்த போது, அடிக்கடி நட்சத்திர ஓட்டல்களில் சந்தித்து கொண்டனர். அந்த வகையில், பிப்ரவரி, 22ம் தேதி, மும்பையில் உள்ள தாஜ் ஓட்டலில் உள்ள வசாபி ரெஸ்டாரன்ட்டுக்கு கரீனா கபூருடன் சென்றார். அவர்களுடன், கரீனாவின் சகோதரி கரீஷ்மா மற்றும் சில நண்பர்கள் சென்றனர். அங்கு நடந்த விருந்தில், அவர்கள் அரட்டை அடித்து மகிழ்ச்சியாக இருந்தனர். அவர்களது அரட்டை கச்சேரி, அதே ரெஸ்டாரன்ட்டுக்கு வந்திருந்த, தென் ஆப்பிரிக்க வர்த்தகரான இக்பால் மிர் ஷர்மாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவர், தன் மாமனாருடன் அங்கு சாப்பிட வந்திருந்தார்.

ஒரு கட்டத்தில், சயீப் குழுவினரின் கூச்சலை பொறுக்க முடியாமல், சயீப் அலிகான் குழுவினரை பார்த்து, அமைதியாக இருக்கும்படி ஷர்மா கேட்டுள்ளார். அது, வாக்குவாதமாகி தகராறில் முடிந்துள்ளது. சயீப்பும், அவரது நண்பர்களும் சேர்ந்து ஷர்மாவை தாக்கியுள்ளனர். இது குறித்து, மும்பை, கொலபா போலீஸ் நிலையத்தில், ஷர்மா புகார் செய்தார்.

புகாரை பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், சயீப் அலிகான் மற்றும் அவரது நண்பர்கள், ஷகில், பிலால் மீது மும்பை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில், 29 பேர் அளித்த வாக்குமூலம் இடம் பெற்றுள்ளது.ஏற்கனவே இந்த வழக்கில், சயீப்பும் அவரது நண்பர்கள் இருவரும், தங்களை போலீசார் கைது செய்யாமல் இருக்க முன் ஜாமின் பெற்றுள்ளனர்.

Advertisement
நான் ரொம்ப நான் ரொம்ப "சாப்ட்டான பொண்ணு - ... புற்றுநோய் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மனிஷா! புற்றுநோய் சிகிச்சை முடிந்து வீடு ...


வாசகர் கருத்து (1)

sachin - india  ( Posted via: Dinamalar Android App )
22 டிச,2012 - 14:23 Report Abuse
sachin so arrogant attitude of Saif. Need to take action for breaking law
Rate this:
0 members
0 members
0 members

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film pramem (telugu)
  • பிரேமம் (தெலுங்கு)
  • நடிகர் : நாக சைதன்யா
  • நடிகை : ஸ்ருதி ஹாசன் ,மடோனா செபாஸ்டியன்
  • இயக்குனர் :சண்டூ மொண்டேடி
  Tamil New Film Achcham enbathu madamayada
  Tamil New Film meenkuzhambbum manpaanayum
  Tamil New Film remo
  • ரெமோ
  • நடிகர் : சிவகார்த்திகேயன்
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :பாக்யராஜ் கண்ணன்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in