ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
இளையராஜாவை தமிழ் திரையுலகின் இசைஞானி என்றே அழைக்கின்றனர். அவரும் அப்படி அழைக்கப்படுவதையே விரும்புகிறார். அதோடு ஆன்மிக ஞானியாகவும் தன்னை பிரகடனப்படுத்திக்கொள்ளும் இளையராஜா, சமீபத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த "நீதானே என் பொன்வசந்தம்" படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கள்ளக்காதலன், கள்ளக்காதலி பற்றி பேசியதும், பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், இந்தியில் இருந்து ஒரு ட்யூனை எடுத்து தமிழில் போட்டு, அந்தப்பாடலை ஹிட் செய்ததை போட்டுக்கொடுத்ததோடு, நான் இதுவரை காப்பியடித்ததே இல்லை... என்று பேட்டி கொடுத்ததையும் கண்ட சீனியர் சினிமா விமர்சகர் ஒருவர், இசைஞானிக்குள் இன்னமும் பொறாமை ஞானி, கொளுந்துவிட்டு எரிந்து கொண்டு தான் இருக்கிறார் போலும்... என கிண்டலடித்தது மீடியா வட்டாரத்தில் மிரட்டலான சிரிப்பு சப்தத்தை ஏற்படுத்தியது உண்மை!
ஆமாம் ஞானிக்குள் ஏன் இன்னமும் இந்த காம, குரோத பொறாமை பவனி...?! இசை ராஜாவிற்கே வெளிச்சம்!!