ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
புயல் காமெடி நடிக்கும் காமெடி மன்னன் இரண்டாவது படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கிவிட்டபோதும் காமெடிக்கு ஜோடி கிடைக்காமல் ரொம்பவே திண்டாடுகிறார்களாம். அவருடன் ஜோடியாக ஆடிய நடிகைகள், நடித்த நடிகைகள் எல்லோருமே அதற்கு பிறகு காணாமல் போய்விடுவதாக ஒரு செண்டிமெண்ட் சினிமாவில் ரொம்ப ஸ்டிராங்காக இருப்பதால் எந்த நடிகையும் நடிக்க தயாராக இல்லையாம். சின்ன நடிகைகளையோ, புதுமுகத்தையோக நடிக்க வைத்தால் பட வியாபாரத்தில் பிரச்சினை வரும் என்று தயாரிப்பு தரப்பு கருதுகிறது. அதனால் பிசியாக இருந்து தற்போது மார்க்கெட் இல்லாமல் இருக்கும் நடிகைகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடன் நடிக்கும் நடிகைக்கு திருமணமாகியிருக்ககூடாது என்ற கண்டிஷன் போட்டிருக்கிறாராம் புயல் காமெடி.