ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வந்த வதந்தி : பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப், நடிகர் சல்மான்கானை காதலித்து வருவதாகவும், இவர்களின் திருமணம் 2012ம் ஆண்டு நடைபெற உள்ளதாகவும் பாலிவுட்டில் பேசப்படுகிறது.
விசாரித்த உண்மை : சமீபத்தில் கத்ரினாவுடன் டேட்டிங் செல்வதாக சல்மான் வெளிப்படையாக தெரிவித்தார். இந்நிலையில் தனது திருமணம் 2012ம் ஆண்டு நடக்கும் என்று கத்ரினா கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியது: அடுத்த இரண்டு வருடங்களுக்கு எனக்கு தொடர்ச்சியாக கால்ஷீட் உள்ளது. அந்தப் படங்களை முடித்தால் கொஞ்சம் நிம்மதியாக இருப்பேன். அதன்பிறகு திருமதி பட்டத்தை பெறுவேன்.அதனால் 2012ல் எனது திருமணம் நடக்கும். நான் பங்களா வாங்கியுள்ளதாக பலர் சொல்கிறார்கள். திருமணம் முடிந்தால் நான் கணவர் வீட்டுக்குதான் செல்வேன். அதனால், நான் பங்களா வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்றார். மாப்பிள்ளை சல்மான்கான் தானே என்று கேட்டதற்கு பதில் சொல்ல மறுத்துவிட்டார்.