Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

கடல் விருதுகளை குவிக்கும்! எழுத்தாளர் ஜெயமோகன் நம்பிக்கை!!

16 டிச, 2012 - 17:48 IST
எழுத்தின் அளவு:

குமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டங்கள் நிறைந்த, திற்பரப்பு அருகே, திருவரம்பு கிராமத்தை சேர்ந்தவர். மத்திய அரசு பணி, இடையூறாக இருந்ததால் அதற்கு முழுக்கு போட்டுவிட்டு, முழுநேர நவீன எழுத்தாளராக களம் இறங்கியவர். "தமிழ் நாவல்களுக்கு புதுவடிவம் கொடுத்தவர், என இலக்கிய வட்டங்களில் பேசப்படும் முன்னணி எழுத்தாளர் ஜெயமோகன்.

எழுத்தாளர் சுந்தரராமசாமியின் "ஒரு புளியமரத்தின் கதை, ப.சிங்காரத்தின் "புயலிலே ஒரு தோணி புத்தகங்களால், கவரப்பட்டு எழுத்தாளாக மாறி, 67 புத்தகங்களை எழுதியுள்ளார். "ரப்பர் இவரது முதல் நாவல், "கொற்றவை, "விஷ்ணுபுரம், "பின் தொடரும் நிழலின் குரல் இவரது முக்கிய படைப்புகள். இலக்கியத்தில் இருந்து திரைப்பட வசனகர்த்தாவாக கால்பதித்து, இங்கும் தனக்கான தனித்துவ அடையாளங்களை ஏற்படுத்த, இக் கனவுத்துறையில் நிஜக்கதைகளோடு நிற்கும் இவரோடு மதுரையில் ஒரு சந்திப்பு...

* சினிமாவை பிடிக்காத இலக்கியவாதிகளும், ஏன் அத்துறைக்கு செல்கிறார்கள்?


தமிழில் நான் எழுதவந்த போது, சுஜாதா, பாலகுமாரன் என ஒரு பெரும் போக்கு இருந்தது. நாங்கள் சிறியவர்கள். இதன் அடையாளங்களை தக்க வைத்துக் கொள்வதில் தான் எங்கள் கவனம் இருந்தது. சினிமா, வணிக பத்திரிகைகளுக்கு போகக் கூடாது என்ற கொள்கை இருந்தது. 1990ல் நிலமை மாறத்துவங்கியது. சினிமா நடிகர்களை விட பிரபலமாக இருந்த, தொடர் கதை எழுத்தாளர்களின் வணிக எழுத்து இல்லாமல் போனது. புத்தக பிரசுரத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. அப்போது ஆண்டிற்கு 400 புத்தகங்கள் தான் வெளிவந்தன. ஆனால் கடந்த ஆண்டு தமிழகத்தில் 30 ஆயிரம் புத்தகங்கள் வெளிவந்து உள்ளன. இது தான் காரணம்.

* வற்புறுத்தலினால் தான் சினிமாவிற்கு வந்தீர்களா?

மலையாள சினிமா இயக்குனர் லோகிததாஸ் நன்கு அறிமுகமானவர். 2004ல் மலையாளத்தில், "கஸ்தூரிமான் படத்திற்கு வசனம் எழுத வாய்ப்பு கொடுத்தார். தமிழிலும் படம் வெளியானது. யாருடைய கட்டாயத்தினாலும் இத்துறைக்கு வரவில்லை. இந்த படத்தை பார்த்த பின் "சுகா என்னை பாலாவிடம் அறிமுகப்படுத்தினார். அவரது "நான் கடவுள் படத்திற்கு எழுதினேன். பிரபலமாக பேசப்பட்டது.

* எப்படிப்பட்ட படங்களை தேர்வு செய்கிறீர்கள்?


வெறும் வணிக ரீதியான படங்களாக இல்லாமல் வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியில் உள்ள உண்மைகள் குறித்து பேசும் படங்களாக இருக்க வேண்டும், என்பதில் கவனமாக உள்ளேன். "அங்காடித்தெரு, "நீர்ப்பறவை படங்கள் இந்த வகையில் தான் இருந்தது. ஓரளவாவது யதார்த்த வாழ்க்கை இருக்க வேண்டும்.

* வசன கர்த்தா நிலையில் இருந்து எப்போது இயக்குனராக மாறுவீர்கள்?


சினிமாவை தீர்மானிக்கும் நிலையில் எழுத்தாளன் இல்லை. என்னாலும் படம் இயக்க முடியும். இதற்கு அதிக உடல் உழைப்பு தேவை. இயக்குனர் மணிரத்தினம் என்னிடம் சொல்வார்... "நீங்களும் இயக்க வந்து விடுவீர்கள் என்று. ஆண்டிற்கு 10 புத்தகங்கள், கதைகள், கட்டுரைகள், விரிவான ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வருகிறேன். திரைப்படம் இயக்க ஓர் ஆண்டாவது தேவை. அதனால் இப்போது இயக்கத்திற்கு நான் தயாராக இல்லை.

* எந்தப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு வைத்துள்ளீர்கள்?


கஸ்தூரிமான், நான் கடவுள், அங்காடித்தெரு படங்கள் மாநில, தேசிய விருதுகள் பெற்றுள்ளன. இது போன்ற எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவர உள்ள "கடல் மற்றும் "6 படங்கள் மீதும் வைத்துள்ளேன். "கடல் எனது கதை தான். மற்ற படங்களை விட இப்படத்தில் எனது பங்களிப்பு அதிகம்.

* படங்களுக்கு பாடல் எழுதும் ஆசை இல்லையா?

எனது நாவல்களில் பாடல்கள் எழுதுகிறேன். தமிழ் சினிமாவில் எழுதவில்லை. ஏ.ஆர்., ரகுமான் இசையில் "கடல் படத்தில் வாய்ப்பு வந்து, போனது. மலையாளத்தில் மதுபால் இயக்கத்தில் வெளிவந்த விவாகரத்து குறித்த "ஒளிமுறிவு படத்தில் "டைட்டில் பாட்டு மற்றும் திரைக்கதை வசனம் எழுதியுள்ளேன். விருது பெற்றுள்ளது.

சினிமா, இலக்கியம் எதற்கு முக்கியத்துவம்? கடும் விமர்சனங்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

எப்போதும் இலக்கியத்திற்குத்தான் முக்கியத்துவம். சினிமாவை ஒரு தொழிலாகவே பார்க்கிறேன். விமர்சனங்கள் என்பது எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கும். ஜெயகாந்தனுக்கே விமர்சனம் இருந்தது என்றால் ஜெயமோகனுக்கு இருக்காதா என்ன?

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

பாஸ்கரன் - adelaide,ஆஸ்திரேலியா
10 பிப், 2013 - 04:18 Report Abuse
 பாஸ்கரன் ஒரு விருது கிடைக்குமா?
Rate this:
saravan - chennai  ( Posted via: Dinamalar Android App )
16 டிச, 2012 - 19:53 Report Abuse
saravan கடல் கண்டிப்பபாக விருதுகள் குவிக்கும் !
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in