Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரிந்திருந்த ப்ரியா ஆனந்த் - சிவகார்த்திகேயனை சேர்த்த கேள்வி | நித்யா மேனனின் வருத்தம்...!! | கேன்ஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கி சூடு : நடிகர், நடிகையர் அலறியடித்து ஓட்டம் | ஜப்பானின் டோக்கியோவில் கோச்சடையான் இசை வெளியீடு! | சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- மாஜி நடிகை ராதா | விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி விட்டது- அருந்ததி புலம்பல் | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ரத்தம் சிந்திய வழக்கு எண் ஸ்ரீ! | சிம்புவுக்காக கோவா செல்லும் படக்குழு! | 100 நாட்கள் ஓடிய கமல், சசிகுமார் படங்கள்! | விஸ்வரூபம் படம் தொடர்பாக போலி கடிதம் ; கமல் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் |

சினிமா முதல் பக்கம் » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

என்னை அழிக்க சூழ்ச்சி நடக்கிறது! - சோனா சிறப்பு பேட்டி

Sona special interview"எஸ்.பி.பி.சரண் என்னை பலாத்காரம் செய்ய முயன்றார்" என்று கண்ணீருடன் பேட்டி கொடுப்பார். "ஆண்கள் இல்லாமல் வாழவும் முடியாது. ஆண்களுடன் வாழவும் முடியாது" என்று நவீன தத்துவம் சொல்வார். திடீரென்று பாலிவுட் முன்னணி நடிகையை அழைத்து வந்து தன் கடையை திறப்பார். பல கோடி செலவு செய்து படம் தயாரிப்பார். இப்படி பன்முகம் கொண்ட சோனாவின் லேட்டஸ்ட் அதிரடி "ஆண்களை டிஷ்யூ பேப்பர் மாதிரி பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்து விடுவேன்" என்ற ஒரு வார இதழுக்கு பேட்டி கொடுக்க ஆண்கள் பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பினர் அவருக்கு எதிராக போரட்டம் நடத்த. பாதுகாப்பு கேட்டு சோனா போலீசை அணுக. என்ற ஏக பரபரப்பில் இருக்கிறது சோனா ஏரியா. இத்தனை பரபரப்புக்கு இடையேயும் ரொம்பவே கேசுவலா அவர் அளித்த சிறப்பு பேட்டி இதோ...

* ஏன் இப்படி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறீர்கள்?

எந்த பின்புலமும் இல்லாமல் சாதாரண குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவள் நான். தனி மனுஷியாக சினிமாவில் போராடி வருகிறேன். எனது சொந்த பாதுகாப்புக்காக சில ஆண் நண்பர்களுடன் நட்புடன் பழகினேன். அதுவே எனக்கு தவறாக போய்விட்டது. எனது வளர்ச்சி கண்டு பொறமைப்படுகிறவர்கள், என்னை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள் இப்படியெல்லாம் திட்டமிட்டு செயல்படுகிறார்கள்.

* அவர்கள் யார் என்று சொல்ல முடியுமா?

நேரம் வரும்போது சொல்வேன். அல்லது நான் எழுதும் சுயசரிதையில் சொல்வேன்.

* ஆண்களை டிஷ்யூ பேப்பர்....? (கேள்வியை முடிப்பதற்குள் பதில் சொல்கிறார்)

ஆண்கள் எல்லோரும் என் சகோதரர்கள். என் தந்தை ஒரு ஆண். என் சகோதரன் ஒரு ஆண், நாட்டை நல்வழிப்படுத்திய ஆன்றோர்கள், சான்றோர்கள் ஆண். இப்போது நம் நாட்டை வழி நடத்திக் கொண்டிருக்கும் தலைவர்கள் ஆண். அப்படி இருக்கும்போது அப்படி நான் சொல்லியிருப்பேனா... ஜாலி பேட்டி என்று சொன்னார்கள். அவர்கள் ஜாலியாக கேள்வி கேட்டார்கள். நான் ஜாலியாக பதில் சொன்னேன். ஆனால் அவர்கள் பத்திரிகை பரபரப்புக்காக நான் சொல்லாததையெல்லாம் எழுதி என்னை சிக்கலில் மாட்டிவிட்டார்கள்.

* உங்களை எதிர்த்து சில அமைப்புகள் போராடுகிறதே?

அவர்கள் செய்வது நியாயம்தான். நான் அவர்களை குறை சொல்ல மாட்டேன். நான் அப்படி கருத்து சொல்லியிருப்பதாக நம்பி அவர்கள் செய்கிறார்கள். நான் அப்படி சொல்லவில்லை என்று பகிரங்கமாக அறிவித்த பிறகும் அவர்கள் போராட்டம் நடத்துவதுதான் வேதனையாக இருக்கிறது.

* இதனால் உங்களுக்கு நல்ல பப்ளிசிட்டிதானே?

(கண்கலங்குகிறார்) யாருக்கு வேணும் சார் இந்த மாதிரி பப்ளிசிட்டி. சும்மா நடிச்சு மட்டும் வாழ முடியாதுன்னு சில வியாபார நிறுவனங்களை நடத்துறேன். பல பேருக்கு வேலை கொடுக்கிறேன். எங்கள் குடும்பமே இந்த நிறுவனங்களை நம்பித்தான் இருக்கிறது. பல லட்சம் தீபாவளி வியாபாரம் போச்சு. வீட்டுக் காரங்க வீட்டை காலி பண்ணச் சொல்றாங்க. கடைக்கு இடம் கொடுத்தவங்க எச்சரிக்கை பண்றாங்க. அம்மா என்னோட பேசி இரண்டு வாரமாச்சு. கடையில வேலை செய்றவங்க கடைக்கு வரவே பயப்படுறாங்க. நான் ஏதோ தப்பான பொண்ணு மாதிரியும். தப்பான வியாபாரம் செய்றமாதிரியும் ஒரு இமேஜை உண்டாக்குறாங்க. எந்த பேக்ரவுண்டும் இல்லாம தனியா பேராடி வாழ்ற ஒரு பொண்ணோட வாழ்க்கையில் இப்படி பண்றது எந்த விதத்துல நியாயம்.

* ஆனால் அடிக்கடி ஏதாவது சர்ச்சையில சிக்குறீங்களே...?


நான் கொஞ்சம் வெளிப்படையாவள். மனசுல எதையும் வச்சுக்கத் தெரியாது, எல்லாத்தையும் படபடனு பேசிடுவேன். அதுவே எனக்கு சில நேரங்கள்ல தப்பா போயிடுது. இனி கொஞ்சம் ஜாக்கிரதையா இருப்பேன். இவளை எப்படி சீண்டினாலும் கேக்க ஆளில்லைன்னு நினைக்கிறாங்க. தனிப்பட்ட முறையில எனக்கு திருமணத்துல உடன்பாடு கிடையாது. ஆனா திருமணங்கற புனிதத்தை மதிக்கிறவள். என் சகோதரிக்கு நான்தான் கல்யாணம் பண்ணிவச்சேன். அவள் குழந்தைய என் குழந்தையா வளர்க்குறேன். குடும்ப வாழ்க்கையில அத்தனை ஈடுபாடு இருக்கு எனக்கு.

* சொந்தபடம் எடுத்தீங்க, அப்புறம் சொந்த வாழ்க்கையை படமா எடுக்கப்போறீங்கன்னு பேச்சு இருந்துச்சு அதெல்லாம் என்னாச்சு...?

அதெல்லாம் கெட்ட கனவா நினைச்சு மறந்துட்டேன். சினிமாவுல நடிப்பை தாண்டி வேறு சில முயற்சிகள் பண்ணிப் பார்த்தேன், சரியா வரலை விட்டுட்டேன்.  இப்போ சினிமால நடிப்பு மட்டுந்தான்னு முடிவு பண்ணி ஒரு வருஷமா இரவும் பகலும் கஷ்டப்பட்டு 25 கிலோ வெயிட்டை குறைச்சு ஸ்லிம் ஆயிருக்கேன். நான்கு தமிழ் படம், நான்கு மலையாளப்படங்கள்ல நடிச்சி என்னோட இரண்டாவது ரவுண்டை ஆரம்பிச்சிருக்கேன். அதை பொறுக்க முடியாதவங்கதான் இப்படியெல்லாம் கிளப்பி விடுறாங்க.

* பிரேம்ஜியுடன் உங்கள் நட்பு....?


நட்புன்னு நீங்களே சொல்லிட்டீங்க. அதுக்கு மேல ஒண்ணும் இல்லை நம்புங்க. அவர் என்னோட படத்துல நடிச்சாரு. அவர் மட்டுமல்ல. அவுங்க கேங்குல நான் ஒரு மெம்பரா இருந்தேன். நான் அல்ட்ரா மார்டன் பொண்ணு. ஆனா இப்போ அந்த கேங்குலேருந்தும் விலகிட்டேன். சும்மா ஒரு ஹாய் சொல்லிக்றதோட சரி. இப்போ பிரேம்ஜியோட ஒரு படம்கூட நடிச்சிட்டிருக்கேன்.

* எஸ்.பி.பி.சரணுடன்....?

அது முடிஞ்சு போன விஷயம். திரும்ப அதுபற்றி பேச வேண்டாமே... ப்ளீஸ்...

கையெடுத்து கும்பிட்டு அனுப்பி வைக்கிறார் சோனா...!!

Tags »
Sona, special interview, சோனா, சிறப்பு பேட்டி,
Share  
Bookmark and Share

தொடர்புடையவை



வாசகர் கருத்து (5)

மொக்கையன் - chennai,இந்தியா
2012-11-22 16:42:00 Report Abuse
 மொக்கையன் நான் கொஞ்சம் வெளிப்படையாவள். மனசுல எதையும் வச்சுக்கத் தெரியாது - சூப்பர் அப்பு
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
சொம்பு ரவி - Chennai,இந்தியா
2012-11-20 18:44:33 Report Abuse
 சொம்பு ரவி ஏய் சோனா சாம்ராஜ்யம், அவ மேலே படை எடுத்து போனா சும்மா திசு பேப்பரை தூக்கி கடசுற மாதிரி கடாசி விடுவா. ஆமா ஓடிரு. இங்கிருந்து ஓடிரு - சோனா ரசிகன் அல்லக்கை சோம்பு ரவி - Chennai.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பயில்வான் - mdu,இந்தியா
2012-11-20 16:21:10 Report Abuse
 பயில்வான் நவீன கண்ணகி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
குப்புசாமி - maarthandapuram,இந்தியா
2012-11-20 14:50:55 Report Abuse
 குப்புசாமி ஆமா ஆமா நீ ஒரு பெரிய ராஜ்ஜியம் உன் மேல படையெடுத்து அழிக்க போறாங்க. போடீ போக்கத்தவளே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
thamim - trichy  ( Posted via: Dinamalar Android App )
2012-11-20 13:46:05 Report Abuse
thamim உனக்கு ஏன் இந்த தேவ இல்லாத வேலை சோனா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 0 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட்

Advertisement

தொடர்புடைய படங்கள்

 
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in