Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2012ல் செஞ்சுரி அடித்தது தமிழ் சினிமா...! 100-க்கு 10 மார்க் பெற்றது!! ஒரு சிறப்பு பார்வை

11 செப், 2012 - 14:13 IST
எழுத்தின் அளவு:

 தமிழ் சினிமா சரித்திரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு திரைப்படங்களின் வருகை டாஸ்மாக் சரக்கு விலை போல் மளமளவென உயர்ந்திருக்கிறது. காவிரியில் தண்ணீர் பொய்த்தாலும் கோடம்பாக்கத்தில் சினிமா பொய்ப்பதில்லை என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. இந்த ஆண்டு விநாயாக என்ற படத்துடன் செண்டிமெண்டாக தமிழ் சினிமா கணக்கை துவக்கியது. ஆகஸட் 31 முகமூடி வரையில் 100 படங்களை வெளியிட்டு செஞ்சுரி அடித்தது. இந்த ஆண்டு முடிய இன்னும் 4 மாதங்கள் இருக்கும் சூழ்நிலையில் இதே வேகத்தில் படங்கள் வெளிவந்தால் நேரடி தமிழ் படங்களின் எண்ணிக்கை 150 ஐ தாண்டும். இது எந்த ஆண்டும் இல்லாத சாதனை அளவாக இருக்கும்.

சரி, வெளியான இந்த 100 படங்களை கொஞ்சம் ரீ-வைண்ட் பண்ணி பார்ப்போமா. 100 படங்களில் வசூலிலும், வெற்றியிலும் முதல் இடத்தை பிடிக்கிறது ஒரு கல் ஒரு கண்ணாடி. 150 நாட்களை கடந்துவிட்டிருக்கிறது. தயாரிப்பாளருக்கு பெரும் லாபத்தை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. தயாரிப்பாளரும், ஹீரோவுமான உதயநிதி ஸ்டாலின் வெற்றி சந்தோஷத்தில் இருந்து இன்னும் வெளியில் வரவில்லை.

அடுத்த சூப்பர் ஹிட் நான் ஈ. தெலுங்கு, தமிழில் தயாரான இந்தப் படம் 40 கோடியில் தயாரானது. தமிழ்நாட்டில் மட்டும் 15 கோடியை அள்ளியது. தெலுங்கில் 75 கோடி என்கிறார்கள். எல்லா மொழிகளிலுமாய் சேர்த்து 100 கோடியை தாண்டியது இதன் வசூல் கார்பரேட் நிறுவனமான பி.வி.பி சினிமாவை மகிழ்ச்சியோடு அடுத்தடுத்த தயாரிப்புகளில் குதிக்க வைத்திருக்கிறது. இதில் நடித்த வில்லன் சுதீப்பிற்கும், இயக்குனர் ராஜமவுலிக்கும் தமிழ் நாட்டில் தனி மவுசு ஏற்பட்டிருக்கிறது. இருவரின் பழைய படங்களை தூசி தட்டி எடுத்து டப்பிங் செய்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மாஸ்கோவின் காவிரி, பாணா கத்தாடி  படத்தோடு தெலுங்கு பக்கம் துரத்தியடிக்கப்பட்ட சமந்தா மீண்டும் கவனிக்கப்பட்டிருக்கிறார்.

அடுத்து வேட்டை. லிங்குசாமி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஆர்யா, அமலா பால், மாதவன், சமீரா ரெட்டி நடித்தனர். அடிமேல் அடிவாங்கும் யுடிவி நிறுவனத்துக்கு கிடைத்த சின்ன ஆறுதல், வேட்டை வெற்றி. இதை அப்படியே இந்திக்கும் லவட்டிக் கொண்டு போகிறார்கள். பெரும் லாபம் சம்பாதிக்கவில்லை என்றாலும் வேட்டை வெற்றிப் படம் என்பதில் சந்தேகமில்லை.

நான்காவது இடத்துக்கு வருகிறது நண்பன். இந்தி 3 இடியட்ஷை ஷங்கர் தமிழில் நண்பனாக தந்தார். ஷங்கர் இயக்கிய முதல் ரீமேக் படம். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் என மூன்று ஹீரோக்கள் இணைந்து நடித்து ஆரோக்கியமான ஒரு பார்முலாவை துவக்கி வைத்தார்கள். பெரும் வெற்றி பெறவில்லை என்றாலும் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை தரவில்லை.

இவை தவிர சின்ன பட்ஜெட்டில் தயாராகி பெரிய லாபத்தை கொடுத்த படங்கள் சில உண்டு. மெரீனா ஒரு கோடியில் தயாரிக்கப்பட்டு 3 கோடி லாபம் சம்பாதித்த படம். அம்புலி என்ற 3டி படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் வெற்றி பெற்றது. 2 கோடியில் தயாரான படம் 4 கோடியை ஈட்டியது. சுந்தர் சி. இயக்கிய கலகலப்பு கலர்புல்லாக ஓடி லாபத்தை அள்ளியது. அட்டக்கத்தி சிறு மூதலீட்டில் தயாரிக்கப்பட்டு தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்தது. காதலில் சொதப்புவது எப்படி, ஏ செண்டர்களில் கலெக்ஷனை அள்ளியது. மனம் கொத்தி பறவை பி மற்றும் சி செண்டர்களில் லாபத்தை ஈட்டியது.

முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் சுமாராக ஓடினாலும். படத்தின் பட்ஜெட்டை நேர் செய்யவில்லை. வழக்கு எண் 18/9  இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு பெரிய புகழை பெற்றுக் கொடுத்தது. ஆனால் தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு பெரும் லாபத்தை தரவில்லை. நஷ்டத்தையும் தரவில்லை. இதேபோல கழுகு படமும் பட்ஜெட்டை நேர் செய்தது. உருமி படம் மலையாளத்தில் பெறாத அங்கீகாரத்தை தமிழில் பெற்றது. 50 நாட்கள் வரை ஓடியது. படத்தின் பட்ஜெட்டை கருத்தில் கொண்டு பார்க்கும்போது லாபத்தை தரவில்லை. நான் படம் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனியை நல்ல நடிகராக அடையாளம் காட்டியது. ஆனால் தயாரிப்பாளராக அடையாளம் காட்டவில்லை.

பச்சை என்கிற காத்து, ராட்டினம், கிருஷ்ணவேணி பஞ்சாலை, மதுபான கடை படங்கள் மீடியாக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. ஆனால் லாபம் சம்பாதிக்கவில்லை.

வசந்தபாலன் இயக்கிய அரவான், பிரகாஷ்ராஜ் இயக்கிய தோணி, ரஜனி மகள் ஐஸ்வர்யா இயக்கிய 3, கார்த்திக் நடித்த சகுணி, மிஷ்கின் இயக்கிய முகமூடி, அஜீத் நடித்த பில்லா 2, ரேணிகுண்டா பன்னீர் செல்வம் இயக்கிய வயது 18 ஆகிய படங்கள் ரசிகர்களை ரொம்பவே எதிர்பார்க்க வைத்து ஏமாற்றியது.

இந்த படங்கள் தவிர மீதமுள்ள படங்கள் ஒருவாரம்கூட தாக்கு பிடிக்காமல் ஓடின. சில படங்கள் முதல் நாளே தியேட்டரை காலி செய்தன. பக்காவாக லாபம் சம்பாதித்த டாப்-10 படங்களை பட்டியலிட்டால் அது இப்படித்தான் இருக்கும்.

1.ஒரு கல் ஒரு கண்ணாடி
2.நான் ஈ
3.வேட்டை
4.நண்பன்
5.அம்புலி
6.கலகலப்பு
7.காதலில் சொதப்புவது எப்படி
8.மெரீனா
9.அட்டக்கத்தி
10.மனம் கொத்தி பறவை.


கூட்டி கழித்துப் பார்த்தால் தமிழ் சினிமா இந்த ஆண்டின் முதல் செமஸ்டரில் 100க்கு 10 மதிப்பெண்களே பெற்றுள்ளது.

(குறிப்பு: படங்களின் பட்ஜெட், தயாரிப்பாளர் ஏரியாவிலும், வசூல் விநியோகஸ்தர் ஏரியாவிலும் விசாரித்து அறிந்தவையே ஆதாரபூர்வமானவை அல்ல)

Advertisement
கருத்துகள் (47) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (47)

karthikprasanna - madurai,இந்தியா
23 அக், 2012 - 20:47 Report Abuse
 karthikprasanna பில்லா வசூல் 40 கோடி நண்பன் வசூல் வெறும் 30 கோடி தான்............................
Rate this:
ப.சரவணன் - Tamil nadu erode,இந்தியா
18 அக், 2012 - 12:46 Report Abuse
 ப.சரவணன் ஏங்க நம்ம மங்காதவ விட்டுடிங்களே அது தாங்க நம்பர் ஒன்னு
Rate this:
ச.செங்கு - usilampatti,இந்தியா
02 அக், 2012 - 15:26 Report Abuse
 ச.செங்கு ஆல் டைம் தல TOP
Rate this:
gowtham - vellore,இந்தியா
25 செப், 2012 - 18:54 Report Abuse
 gowtham Therefore the tamil and telugu version of the film has grossed above 265 crore (US$47.97 million) making it the second highest grossing tamil film of all time after Endhiran. (சர்ச் இன் விக்கிபீடியா நண்பன்) போர் ப்ரோப் ஆல் டைம் ரெகார்ட் ஹோல்டர் விஜய்...நெக்ஸ்ட் சூப்பர் ஸ்டார் !!!
Rate this:
கெளதம் - cochin,இந்தியா
25 செப், 2012 - 18:49 Report Abuse
 கெளதம் நண்பன் படம் ஹிட் இல்லன்னு சொல்றவங்களுக்கு சினிமா ரசனையே இல்ல. தினமலர் முதல கிளியர ரிப்போர்ட் பண்ணுங்க ப....
Rate this:
மேலும் 42 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in