Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

வசூல் மழையில் நனைந்தும், நனையாத மாதம் : நவம்பர் மாதம் திரைப்படங்கள் - ஓர் பார்வை!

04 டிச, 2017 - 12:49 IST
எழுத்தின் அளவு:
November-month-Movie-Report

நவம்பர் மாதம் என்றாலே மழை மாதம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். கடந்த சில வருடங்களாக நவம்பர் மாதத்தில் பெய்யும் மழையை விட டிசம்பர் மாதத்தில்தான் மழை அதிகமாகப் பெய்கிறது.

அக்டோபர், நவம்பர் மாதங்களில் தீபாவளி மாறி மாறி வரும். தீபாவளிக்குப் படங்களை வெளியிடுபவர்கள் கூட அந்த சமயங்களில் மழை வராமல் இருந்து, நம் படத்தை வசூல் மழையைப் பொழிய வைக்க வேண்டுமே என்ற ஏக்கத்தில் இருப்பார்கள். இந்த ஆண்டில் நவம்பர் மாதத்தில் தான் மழை பரவலாகப் பெய்தது. ஆனால், நனைந்தும், நனையாத மாதமாகத்தான் இருந்தது. பலத்த மழையும் இல்லாமல், தூறலும் இல்லாமல், கன்னியாகுமரி மாவட்டத்தைத் தவிர பெயருக்குத்தான் பெய்துவிட்டுப் போயிருக்கிறது. இன்னும் பல ஏரிகள் நிரம்பாமலேயே உள்ளன.

அதே போலத்தான் திரையுலகத்திலும் நவம்பர் மாதத்தின் 30 நாட்களில் 5 வாரங்களில் 22 படங்கள் வந்து, பல தயாரிப்பாளர்களின் வருமானத்தை நிரப்பாமலேயே சென்று விட்டது. நவம்பர் மாதத்தில் மட்டும், 3, 9, 10, 17, 24, 29 ஆகிய நாட்களில் படங்கள் வெளிவந்துள்ளன. நவம்பர் மாதத்தின் முடிவில் இந்த 2017ம் ஆண்டில் மொத்தம் 182 படங்கள் வெளிவந்துள்ளன.

கவனம் ஈர்த்த அவள், விழித்திரு
நவம்பர் 3ம் தேதி, “அவள், அழகின் பொம்மி, திட்டி வாசல், உறுதிகொள், விழித்திரு” ஆகிய 6 படங்கள் வெளிவந்தன. இவற்றில் அவள் படம் மட்டுமே ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்றது. பெரிய அளவிலான வியாபாரமும், வசூலும் இல்லை என்றாலும் கூட பல இடங்களில் இப்படத்திற்கு லாபம் கிடைத்தது என வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மற்ற படங்களில் விழித்திரு படம் பல முறை தள்ளி வைக்கப்பட்டு, வெளியாகி விமர்சகர்களால் கொஞ்சம் பாராட்டப்பட்டது என்றாலும் வசூலில் பலத்த நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. மற்ற படங்கள் வழக்கம் போல பட எண்ணிக்கையைக் கூட்டிய படங்கள் மட்டுமே.

நவம்பர் 9ம் தேதி, வியாழக்கிழமை அன்று உதயநிதி ஸ்டாலின் நடித்த இப்படை வெல்லும் படம் வெளியானது. அஜித் படங்கள் தான் பொதுவாக வியாழக்கிழமைகளில் வெளிவருவது வழக்கம். இவர்களும் ஏனோ வியாழக்கிழமையில் படத்தை வெளியிட்டார்கள். ஆனால், எந்த வரவேற்பும், வசூலும் படத்திற்குக் கிடைக்கவில்லை. உதயநிதி ஸ்டாலின் படங்களில் சந்தானம் இல்லாதது அவருடைய வெற்றிக்குக் கை கொடுக்கவில்லை. சந்தானம் இடத்தை சூரியால் நிரப்ப முடியவில்லை என்பதே உண்மை.

சிறந்த படம் அறம்

நவம்பர் 10ம் தேதி, 143, நெஞ்சில் துணிவிருந்தால், அறம் ஆகிய படங்கள் வெளிவந்தன. நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த அறம் படம் அனைவரது பாராட்டுக்களையும் பெற்ற ஒரு படமாக அமைந்தது. எந்த விதமான சினிமாத்தனமான காட்சிகளும் இல்லாமல், ஒரு சென்டிமென்ட் கதைக்குள், சமூகக் கருத்துக்களையும் உள்ளடக்கிய அறம் இந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்துவிட்டது.

வாபஸ் ஆன படம்
நெஞ்சில் துணிவிருந்தால் படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து எதிர்மறையான விமர்சனங்களும், கருத்துக்களும் வந்ததால் படத்தையே தியேட்டர்களிலிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டதாக அறிவித்து அதிர்ச்சியைக் கொடுத்தார் இயக்குனர் சுசீந்திரன். 143 படத்திற்கு ஒரு காட்சிக்கு அத்தனை பேர் வந்திருந்தால் அதுவே அந்தப் படத்திற்குக் கிடைத்த வெற்றி என்று எடுத்துக் கொள்ளலாம்.

கார்த்திக்கு வெற்றி தந்த தீரன்
நவம்பர் 17ம் தேதி என் ஆளோட செருப்பக் காணோம், மேச்சேரி வனபத்ரகாளி, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்கள் வெளிவந்தன. ஒரு வித்தியாசமான போலீஸ் விசாரணைக் கதையாக அமைந்த தீரன் அதிகாரம் ஒன்று படம் கமர்ஷியல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. கார்த்தியின் முந்தைய படத் தோல்வியை தீரன் சரியான விதத்தில் சமாளித்துவிட்டது. என் ஆளோட செருப்பக் காணோம் சில நாட்களிலேயே தியேட்டர்களில் காணோம். வனபத்ரகாளி போன்ற பக்திப் படங்களைப் பார்க்க இந்தக் காலப் பெண்கள் கூடத் தயாரில்லை போலிருக்கிறது.

நவம்பர் 24ம் தேதி, “குரு உச்சத்துல இருக்காரு, தரிசு நிலம், இங்கிலீஷ் படம், வீரையன், லாலி லாலி ஆராரோ, யாழ், இந்திரஜித்” ஆகிய படங்கள் வெளிவந்தன. மற்ற படங்களை விட இந்திரஜித் படத்தை அளவுக்கதிகமாகவே விளம்பரப்படுத்தினார்கள். மகனுக்காகவே படத்தை எடுத்து வெளியிட்ட பிரம்மாண்ட தயாரிப்பாளர், அதனால் வசூல் கணக்கைப் பற்றி அவர் கவலைப்பட வாய்ப்பில்லை. மற்ற படங்கள் வெளியானது பற்றி ரசிகர்களுக்குத் தெரிந்திருந்திருந்தால் அந்தப் படங்களும் சில நாட்களாவது ஓடியிருக்கும்.

நவம்பர் 29ம் தேதி திருட்டுப் பயலே 2, அண்ணாதுரை ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்த இரண்டு படங்களுமே வியாழக்கிழமையே வெளியானது ஆச்சரியம்தான். இரண்டு படங்களுக்கும் மிக மிகச் சுமாரான விமர்சனங்கள்தான் கிடைத்துள்ளன. படத்தின் தயாரிப்புச் செலவை வசூலித்தாலே இரண்டு படங்களுக்கும் வெற்றிதான். அதிக செலவில்லாமல் எடுக்கப்பட்டிருந்தால் தப்பிக்க வாய்ப்புள்ளது. ஆனால், படம் வெளியாகி நான்கு நாட்கள்தான் ஆகியுள்ளதால், இன்றுதான் இப்படங்களின் உண்மை நிலவரம் தெரியும்.

நவம்பர் மாதத்தில் மொத்தம் 22 படங்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் அறம், தீரன் அதிகாரம் ஒன்று, ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடமும் மொத்தமாக பாராட்டைப் பெற்ற படங்களாக அமைந்தன.

2017ம் ஆண்டின் கடைசி மாதத்தில் இன்னும் நான்கு வாரங்களே உள்ளன. இந்த நான்கு வாரங்களில் 20 படங்கள் வெளிவந்து கடந்த சில வருடங்களைப் போல மொத்த படங்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டுமா என்பது தெரியவில்லை.

ஆண்டு இறுதி ரிலீஸ்
“கொடி வீரன், அருவி, சத்யா, ரிச்சி, வீரா, பள்ளிப் பருவத்திலே, வேலைக்காரன், சக்க போடு போடு ராஜா, உள்குத்து, பலூன், சங்கு சக்கரம்” ஆகிய படங்கள் வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் மேலும் சில படங்கள் திடீரென களத்தில் குதிக்கலாம். அப்படி வந்தால் இந்த ஆண்டின் மொத்த படங்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்ட வாய்ப்புள்ளது.

திரையுலகத்தைப் பொறுத்தவரை இந்த 2017ம் ஆண்டு மகிழ்ச்சிகரமாகவே அமைந்ததா என்பதை இன்னும் நான்கு வாரங்களில் மொத்தமாகப் பார்த்துவிடலாம்.

நவம்பர் மாதம் வெளிவந்த படங்கள்...

நவம்பர் 3 : அவள், அழகின் பொம்மி, திட்டி வாசல், உறுதிகொள், விழித்திரு

நவம்பர் 9 : இப்படை வெல்லும்

நவம்பர் 10 :
143, நெஞ்சில் துணிவிருந்தால், அறம்

நவம்பர் 17 :
என் ஆளோட செருப்பக் காணோம், மேச்சேரி வனபத்ரகாளி, தீரன் அதிகாரம் ஒன்று

நவம்பர் 24 : குரு உச்சத்துல இருக்காரு, தரிசு நிலம், இங்கிலீஷ் படம், வீரையன், லாலி லாலி ஆராரோ, யாழ், இந்திரஜித்

நவம்பர் 29 : அண்ணாதுரை, திருட்டுப் பயலே 2

Advertisement
அன்று ஜிவி... இன்று அசோக்...! - கந்து வட்டி, கட்ட பஞ்சாயத்தின் பிடியில் தமிழ் சினிமா...!அன்று ஜிவி... இன்று அசோக்...! - கந்து ... ஏ.எல்.விஜய்யின் கரு படத்தின் தெலுங்கு பெயர் கனம் ஏ.எல்.விஜய்யின் கரு படத்தின் ...


வாசகர் கருத்து (5)

navasathishkumar - MADURAI,இந்தியா
05 டிச, 2017 - 08:18 Report Abuse
navasathishkumar டிக்கெட் விலை குறையாத வரை மெட்ரோ ஏரியா தவிர எங்கும் வசூலாகாது . பழைய படி எழுபது ரூபாய் இருந்தால் அரங்கம் நிரம்பும் இல்லை மெர்சல் தான் ரசிகனுக்கு .
Rate this:
sam - Bangalore,இந்தியா
16 டிச, 2017 - 10:28Report Abuse
samIf they want to reduce the ticket price, then Actor and Actress and Director need to reduce their salary. If you see 60% to 70% budget goes to their salary .. then how producer will earn. Vijay talking about 28% GST, he is the second highly paid actor....
Rate this:
Venkataraman Sekkar - Trivandrum,இந்தியா
04 டிச, 2017 - 20:11 Report Abuse
Venkataraman Sekkar இதெல்லாம் சரி. மெர்ஸெல் என்ன ஆயிற்று.
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
04 டிச, 2017 - 18:51 Report Abuse
A.George Alphonse Due to the decline and downfall of cenimas at this moment the film stars are taking more interest in politics for their good future. Hereafter we can hear many actors follow and enter into politics like Mr.Vishal Reddy in our state in coming days.
Rate this:
Sathish Kumar - chennai,இந்தியா
04 டிச, 2017 - 13:23 Report Abuse
Sathish Kumar வசூல் மழையில் நனைந்தும் நனையாமல் இருந்தாலும் ஜி எஸ் டி யில் நனையாமல் இருக்காது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devil Night Dawn of the Nain Rouge
  Tamil New Film Oru Kathai Sollatuma
  Tamil New Film Billa Pandi
  • பில்லா பாண்டி
  • நடிகர் : ஆர் கே சுரேஷ்
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :சரவண சக்தி
  Tamil New Film Velaikkaran
  • வேலைக்காரன்
  • நடிகர் : சிவகார்த்திகேயன்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :ஜெயம் ராஜா

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in