ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகத்தில் பட வெளியீட்டு மாதங்கள் என்று சில மாதங்களும், சில கிழமைகளும், சில விசேஷ நாட்களும் இருக்கும்.
பொங்கல், குடியரசு தினம், தமிழ்ப் புத்தாண்டு, மே தினம், சுதந்திர தினம், ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய சில விசேஷ நாட்களில்தான் முன்பெல்லாம் அதிகப் படங்கள் வெளியாகும். பத்து படங்கள் வெளியான விசேஷ நாட்கள் எல்லாம் இருந்திருக்கின்றன. அடுத்து சில குறிப்பிட்ட மாதங்களில் படங்கள் அதிகமாக வெளியாகும். ஏப்ரல், மே, ஆகஸ்ட், டிசம்பர் ஆகிய மாதங்களில் மற்ற மாதங்களை விட அதிகப் படங்கள் வெளிவரும். அதே போல படங்கள் பெரும்பாலும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே வெளிவரும்.
கடந்த சில வருடங்களாக இப்படிப்பட்ட நடைமுறைகள் அனைத்தும் காணாமல் போனது. விசேஷ நாட்களில் படங்கள் வெளிவருவதில்லை. அப்படியே வந்தாலும் ஓரிரு படங்கள் மட்டுமே வருகின்றன. வெள்ளிகிழமைகளில் மட்டுமே படங்களை வெளியிட்ட நாட்களும் குறைந்து வியாழக்கிழமைகளில் கூட படங்களை வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆகஸ்ட் மாதம் என்பது அதிகப் படங்கள் வெளியாகும் மாதம், சுதந்திர தினத்தில் பல படங்கள் வெளிவரும் என்பதெல்லாம் போன வருடத்தோடு முடிந்து போய்விட்டதோ எனத் தோன்றுகிறது. இந்த வருடம் சுதந்திர தினத்திற்கு ஒரு படம் கூட வரவில்லை என்பது அதிர்ச்சியான தகவல்.
கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் குறைவான படங்களே வெளிவந்துள்ளன.
ஆகஸ்ட் 4ம் தேதி ஆக்கம், கோடம்பாக்கத்தில் கோகிலா, மன்மதப் பார்வை, சதுர அடி 3500, ஏன் இந்த மயக்கம் ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் ஆக்கம், சதுர அடி 3500, ஏன் இந்த மயக்கம் ஆகிய படங்கள் குறைந்த பட்சம் 3 காட்சிகளாவது ஓடியிருந்தால் அதிசயம்தான். கோடம்பாக்கத்தில் கோகிலா, மன்மதப் பார்வை ஆகிய படங்களின் பெயரைப் பார்த்தாலே மலையாளப் படங்கள் போலத்தான் இருக்கின்றன. சினிமாவைப் பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லாமல் இப்படி பெயரை வைத்து படத்தை எடுப்பவர்களை என்ன சொல்வது ?.
ஆகஸ்ட் 5ம் தேதி உள்ளம் உள்ளவரை படம் வெளியானது. தியேட்டர் பெயருடன் விளம்பரம் செய்ததைப் பார்த்த போது அந்த தியேட்டர்களில் இந்தப் படம் வெளியானதா என்று கூட யோசிக்கத் தோன்றுகிறது.
ஆகஸ்ட் 11ம் தேதி பொதுவாக எம்மனசு தங்கம், தரமணி, விஐபி 2 ஆகிய படங்கள் வெளியாகின. இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தப் படங்கள் 25வது நாளையும் கடந்திருப்பது ஆச்சரியம்தான். பெரிய வெற்றி என்று சொல்ல முடியாவிட்டாலும் சுமாரான வெற்றியை இந்த மூன்று படங்களுமே பெற்றன. நீண்ட வாரங்களுக்குப் பிறகு ஒரே நாளில் வெளிவந்த மூன்று படங்கள் ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்றது வரவேற்க வேண்டிய ஒன்று.
ஆகஸ்ட் 24ம் தேதி விவேகம், தப்பாட்டம் ஆகிய படங்கள் வெளிவந்தன. கடந்த மாதத்தில் வெளிவந்த படங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் விவேகம். இயக்குனர் சிவா, அஜித் கூட்டணியில் மூன்றாவதாக வெளிவந்த இந்தப் படம் எதிர்பார்ப்புகளை ஏமாற்றிய படமாகவே அமைந்தது. கடுமையாக விமர்சனத்துக்குள்ளான இந்தப் படம் 150 கோடி வசூலைக் கடந்தும் பலருக்கு லாபத்தைக் கொடுக்க வழியில்லை என்பதே உண்மை. தப்பாட்டம் படம் பெயரைப் போலவே, எதற்கு இப்படியெல்லாம் படம் எடுத்து காசை வீணாக்குகிறீர்கள் என தயாரிப்பாளரிடம் கேட்கத் தோன்றுகிறது.
ஆகஸ்ட் 25ம் தேதி அட்ரா ராஜா அடிடா, பணம் பதினொன்னும் செய்யும் ஆகிய படங்கள் வெளிவந்தன. இப்படி படங்கள் வெளிவந்ததா என இதைப் படிப்பவர்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். பணம் அதிகம் இருந்தால் படம் எடுக்கத் தோணும் என்றுதான் இதைப் பற்றிச் சொல்ல வேண்டும்.
ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்த 13 படங்களில் பொதுவாக எம்மனசு தங்கம், தரமணி, விஐபி 2, விவேகம் ஆகிய நான்கு படங்கள் மட்டுமே தியேட்டர்களுக்கு மக்களை வரவழைத்த படங்கள். வித்தியாசமான படம் என்று பாராட்டப்பட்ட தரமணி சிட்டியைத் தாண்டி ஓடவில்லை. பி அன்ட் சி ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்று சொல்லப்பட்ட பொதுவாக எம்மனசு தங்கம் பெரிய வசூலைத் தரவில்லை. விஐபி 2, விவேகம் ஆகிய படங்கள்தான் அதிக வசூலைப் பெற்ற படங்கள். அப்படியே பெற்றிருந்தாலும் அந்தப் படங்கள் லாபத்தைத் தரவில்லை என்பதுதான் உண்மை நிலவரம்.
மொத்தத்தில் ஆகஸ்ட் மாதம் அதிர்ச்சியைத்தான் கொடுத்திருக்கிறது.
ஆகஸ்ட் 4
ஆக்கம், கோடம்பாக்கத்தில் கோகிலா, மன்மதப் பார்வை, சதுர அடி 3500, ஏன் இந்த மயக்கம்
ஆகஸ்ட் 5
உள்ளம் உள்ளவரை
ஆகஸ்ட் 11
பொதுவாக எம்மனசு தங்கம், தரமணி, விஐபி 2
ஆகஸ்ட் 24
விவேகம், தப்பாட்டம்
ஆகஸ்ட் 25
அட்ரா ராஜா அடிடா, பணம் பதினொன்னும் செய்யும்