Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

மார்ச் மாதத்தில் முந்தியது யார்? - மார்ச் மாதப் படங்கள் ஒரு பார்வை

04 ஏப், 2017 - 15:07 IST
எழுத்தின் அளவு:
Which-movies-are-success-in-March?

2017ம் ஆண்டின் காலாண்டைக் கடந்து விட்டோம். ஆனால், முந்தைய இரண்டு ஆண்டுகளைப் போல இந்தக் காலாண்டில் படங்கள் வெளிவரவில்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.


2015ம் ஆண்டின் காலாண்டில் 60 படங்களும், 2016ம் ஆண்டின் காலாண்டில் 52 படங்களும் வெளி வந்தன. ஆனால், இந்த 2017ம் ஆண்டின் காலாண்டில் 44 படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன.


அதிலும், 2017 ஜனவரி மாதத்தில் 8 படங்களும், பிப்ரவரி மாதத்தில் 11 படங்களும் மட்டுமே வெளியாகின. அதே சமயம் மார்ச் மாதத்தில் 25 படங்கள் வெளிவந்து, முந்தைய இரண்டு மாதங்களில் வெளியான படங்களின் எண்ணிக்கையைத் தாண்டியது.


இந்த மூன்று மாதங்களில் வெளியான 44 படங்களில் பெரிய அளவில் லாபகரமான வசூலைக் கொடுத்த படங்கள் என்று சொன்னால் ஒன்றிரண்டு படங்களே மிஞ்சியுள்ளன.ஜனவரி மாதத்தில் வெளிவந்த விஜய் நடித்த பைரவா படமும், பிப்ரவரி மாதத்தில் சூர்யா நடித்து வெளிவந்த சி 3 படமும் எதிர்பார்ப்புகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தோல்வியைத் தழுவின.


இந்த நிலை இனி வரும் மாதங்களிலாவது மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


இந்த மார்ச் மாதம் வெளிவந்த படங்களில் படுதோல்வியடைந்த படங்களும் எதிர்பாராமல் வெற்றியடைந்த படங்களும் உள்ளன.


மார்ச் 3ம் தேதி “குற்றம், முப்பரிமாணம், யாக்கை” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் குற்றம் படம் மட்டுமே விறுவிறுப்பான த்ரில்லர் படமாக அமைந்து எதிர்பார்த்ததற்கும் மேலாக வசூலைக் கொடுத்ததாக வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


முப்பரிமாணம் படமாவது தனக்குத் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்த்த சாந்தனுவுக்கு அந்தப் படமும் வழக்கம் போல ஏமாற்றத்தைத் தந்தது. கிருஷ்ணாவையெல்லாம் நாயகனாக நம்பி எப்படித்தான் படங்களை எடுக்கிறார்களோ, சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம். அவர் நடித்து வெளிவந்த யாக்கை யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல் தோல்வியைத் தழுவியது.


மார்ச் 9ம் தேதி மொட்ட சிவா கெட்ட சிவா படம் வெளியானது. இரண்டு, மூன்று முறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு, படம் வெளிவருமோ வராதோ என்ற சந்தேகத்திலேயே 9ம் தேதி படம் வெளி வந்தது. தெலுங்குப் படத்தை விட அதிகப்படியான மசாலாப் படமாக அமைந்த இந்தப் படம் ராகவா லாரன்ஸுக்கு பெரிய வெற்றியைத் தரவில்லை.


மார்ச் 10ம் தேதி “மாநகரம், நிசப்தம்” ஆகிய படங்கள் வெளிவந்தன. மாநகரம் படம் மாநகரங்களில் உள்ள தியேட்டர்களில் மட்டும் வரவேற்பைப் பெற்றது. மற்ற இடங்களில் பெரிய அளவில் வசூலைப் பெறவில்லை. கொரியன் படத்தைக் காப்பியடித்து எடுக்கப்பட்ட நிசப்தம் படம் விமர்சன ரீதியாக ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்றது.


மார்ச் 17ம் தேதி “ப்ரூஸ் லீ, கன்னா பின்னா, கட்டப்பாவ காணோம், ஒரு முகத்திரை, வாங்க வாங்க” ஆகிய படங்கள் வெளிவந்தன. ப்ரூஸ் லீ படம் ஜி.வி.பிரகாஷ்குமாரின் மார்க்கெட்டையே அடித்துத் துவைத்தது. அவர் நடிப்பதை விட்டுவிட்டு, இசையமைக்க மட்டும் செய்யலாம் என விமர்சனங்கள் எழுந்தன. அவரை வைத்து தற்போது படம் எடுத்துக் கொண்டிருப்பவர்கள் மிரண்டு போய் இருக்கிறார்கள். மற்ற படங்கள் ரசிகர்களிடம் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கன்னா பின்னா, வாங்க வாங்க மாதிரியான படங்கள் எதற்காக எடுக்கப்படுகின்றன என்பது தயாரித்தவர்களுக்கே வெளிச்சம்.


மார்ச் 24ம் தேதி “1 ஏஎம், 465, தாயம், எங்கிட்ட மோதாதே, கடுகு, பாம்பு சட்டை, சாந்தன், வைகை எக்ஸ்பிரஸ்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் எங்கிட்ட மோதாதே, கடுகு, பாம்பு சட்டை ஆகிய படங்கள் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற படங்களாக இருந்தன. இருந்தாலும் எங்கிட்ட மோதாதே படத்தில் காட்சிகளில் செலுத்திய கவனத்தை கதையில் செலுத்தவில்லை. கடுகு படம் சூர்யா வாங்கியதால் ஒரு கவனத்தை ஈர்த்தது, ஆனாலும் கொண்டாடும் அளவிற்கு படத்தில் பெரிய விஷயம் எதுவுமில்லை என்பது குறைதான். பாம்பு சட்டை படம் எல்லாம் சரியான சமயத்தில் திட்டமிட்டபடி வந்திருந்தால் வசூலைப் பெற்றிருக்கும். 1 ஏஎம், 465 படங்களின் எண்ணிக்கையைக் கூட்டிய படங்கள் மட்டுமே.


மார்ச் 31ம் தேதி “அரசகுலம், அட்டு, டோரா, கவண், நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல, செவிலி” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் டோரா, கவண் ஆகிய படங்கள் மட்டும்தான் ஓரளவிற்கு வசூலைக் கொடுக்கும் படங்களாக உள்ளன. இரண்டு படங்களுமே தரத்தில் சிறந்த படங்கள் என்றில்லை என்பதே உண்மை. டோரா படம் நயன்தாராவால் மட்டுமே ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைத்துள்ளது. கவண் படத்தில் டிவி மீடியாக்கள் செய்யும் தில்லு முல்லுகளைச் சொல்கிறேன் என அமெச்சூரான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். மற்ற படங்கள் வழக்கம் போல படங்களின் எண்ணிக்கையைக் கூட்ட உதவியுள்ளன.


மார்ச் மாதம் போன்றே 20க்கும் மேற்பட்ட படங்கள் வந்தால்தான் இந்த 2017ம் ஆண்டிலும் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டும். மாறாக ஜனவரி, பிப்ரவரி மாதம் போல குறைந்த எண்ணிக்கையில் படங்கள் வெளிவந்தால் 100த் தாண்டுவதே பெரிய விஷயமாக இருக்கும்.


ரசிகர்களைக் கவரும் விதத்தில் படங்கள் இருந்தால் மட்டுமே வசூலைப் பெற முடியும் என்ற உண்மை தெரிந்தும் பலர் படங்களைக் கொடுக்கிறார்களே என்பதுதான் வருத்தமான விஷயம்.
மார்ச் மாதம் வெளிவந்த படங்கள்...


மார்ச் 3


குற்றம்


முப்பரிமாணம்


யாக்கை
மார்ச் 9


மொட்ட சிவா கெட்ட சிவா
மார்ச் 10


மாநகரம்


நிசப்தம்


மார்ச் 17


ப்ரூஸ் லீ


கன்னா பின்னா


கட்டப்பாவ காணோம்


ஒரு முகத்திரை


வாங்க வாங்க


மார்ச் 24


1 ஏஎம்


465


தாயம்


எங்கிட்ட மோதாதே


கடுகு


பாம்பு சட்டை


சாந்தன்


வைகை எக்ஸ்பிரஸ்


மார்ச் 31


அரசகுலம்


அட்டு


டோரா


கவண்


நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல


செவிலி


Advertisement
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நடந்த அரசியல்தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நடந்த ... பாகுபலி - இந்தியத் திரையுலகின் பெருமை! ஓர் பார்வை பாகுபலி - இந்தியத் திரையுலகின் ...


வாசகர் கருத்து (5)

Kavikuil - Bangalore,இந்தியா
08 ஏப், 2017 - 17:41 Report Abuse
Kavikuil வெகு மாதங்களுக்கு பிறகு கடுகு படம் ..என் மனதை பாதித்த படம் . படம் எடுக்க மிகுந்த பொருள் செலவு தேவையில்லை ..நல்ல கதை களமும் ,இயக்கும் திறமையும் ,பாத்திரங்கள் தேர்ந்தெடுத்தல் மட்டும் போதும் எனநினைக்கிறேன் . கவிக்குயில் ,பெங்களூரு .
Rate this:
SARAVANAN - Muscat,ஓமன்
05 ஏப், 2017 - 10:36 Report Abuse
SARAVANAN கவண் ஜாம்பவான் னு விமர்சனம் போட்டீங்க இப்போ அமெச்சூர் ஆண படம்னும் சொல்றீங்க ... மீடியா வ பத்தி படம் எடுத்ததால உங்களுக்கு கோவமோ ... கஷ்டம்டா சாமி ....
Rate this:
subbu - QLD,ஆஸ்திரேலியா
05 ஏப், 2017 - 05:15 Report Abuse
subbu கவண் முதல் பாதி ஓகே .
Rate this:
balasubram - Tirunelveli,இந்தியா
04 ஏப், 2017 - 15:21 Report Abuse
balasubram எங்கப்பா அந்த மொட்டை சிவா கெட்ட சிவா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film RK Nagar
  • ஆர்.கே.நகர்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : சனா அல்தாப்
  • இயக்குனர் :சரவண ராஜன்
  Tamil New Film Chennai 2 Bangkok
  Tamil New Film Traffic Ramasamy
  Tamil New Film Amman Thayee
  • அம்மன் தாயி
  • நடிகர் : அன்பு (புதியவர்)
  • நடிகை : ஜூலியானா
  • இயக்குனர் :சரண் (புதியவர்)

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in