ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிலம்பாட்டம் படத்தில், சிம்புவுடன் அறிமுகமானவர், சனா கான். மும்பையில் இருந்து வந்ததால், மீண்டும் வந்த பக்கமே சென்று விட்டார். தற்போது, சில பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்து, விரைவில் ரிலீசாக உள்ள, வஜா தும் ஹோ படத்தின் டிரைலர் மட்டுமே, லட்சக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கும், சனாவுடன் ஒரு சந்திப்பு:
அடுத்து, உங்கள் நடிப்பில் வெளி வர உள்ள, ஹிந்தி படம் பற்றி சொல்லுங்க என்ன ஸ்பெஷல் ?
வஜா தும் ஹோ படத்தில், எனக்கு அதிகமான காட்சிகள் உள்ளன. இயக்குனர் விஷால், என்னை நம்பி கொடுத்த ரோலை, முழுமையாக நிறைவு செய்திருக்கிறேன். இந்த படம், என் வாழ்கையில் மிக முக்கியமானதாக இருக்கும். இப்படி ஒரு வாய்ப்புக்காகத் தான், இத்தனை ஆண்டுகள் காத்திருந்தேன். இதில், வழக்கறிஞராக நடித்திருக்கிறேன் என்று சொல்வதை விட, வாழ்ந்து இருக்கேன் என்று தான் கூற வேண்டும்.
ஏன் தமிழ் படங்களில் நடிப்பது இல்லை?
அப்படி எல்லாம் எதுவுமில்லை; ஹிந்தி படங்களில் அதிக கவனம் செலுத்துகிறேன். நல்ல வாய்ப்பு வந்தால், தமிழ் படங்களிலும் கண்டிப்பாக நடிப்பேன். தமிழில் தான், முதன்முதலாக அறிமுகமானேன்; அதனால், தமிழ் படங்கள் எனக்கு பிடிக்கும்.
தமிழில் நீங்க விரும்பும் நடிகர்கள்...
ரஜினி சாரைப் பிடிக்கும்; அப்புறம், அஜீத் சாரை பிடிக்கும்; அவருடன், ஒரு படத்தில் நடிக்க ஆசை. விஜய் படங்களையும் நிறைய பார்த்திருக்கிறேன்; அவரையும் பிடிக்கும்.
சிம்பு ?
அவர் தான் என்னை அறிமுகப்படுத்தினார்; எனக்கு ரொம்ப பிடித்த நடிகர். சின்ன வயதிலேயே, அதிக திறமையுடன் இருக்கும் நடிகர்; படப்பிடிப்பில் ஜாலியாக இருப்பார்.
சமீபத்தில் பார்த்த தமிழ் படம்?
ரொம்ப வருஷத்துக்கு பின், கபாலி படத்தை, என் தோழிகளுடன் மும்பையில் பார்த்தேன். ரஜினியுடன் நடிப்பது, எனக்கு மிகப்பெரிய கனவு; கண்டிப்பாக அந்த கனவு, ஒரு நாள் நிறைவேறும் என, நம்புகிறேன்.
சல்மான் கான் கூட, நீங்க நெருக்கமாமே?
என்னை சந்திக்கும் அனைவருமே இதைத்தான் கேட்கின்றனர். அனைவருக்கும் கோபப்படாமல் பதில் சொல்கிறேன். அவருடன், ஜெய் ஹோ படத்தில் நடிச்சிருக்கேன்; சில விளம்பர படங்களில்நடிச்சிருக்கேன். சல்மான், ரொம்ப அருமையான மனிதர். என்னை ஊக்கப்படுத்தி நடிக்க வைத்தார். அவரை நினைத்தாலே, ரொம்ப பெருமையாக இருக்கு. அவர், என் வாழ்வில் ஒரு அங்கமாக இருந்துள்ளார். அவர் வாழக்கையில், நான் ஒரு புள்ளியாக இருந்திருக்கேன்.
உங்க பிட்னஸ் ரகசியம் என்ன?
பெரிய ரகசியம் எதுவுமில்லை. தினமும், ஒரு மணி நேரம், ஜிம்முக்கு போய் விடுவேன்; சரியான நேரத்தில், சரியான உணவை சாப்பிடுவேன். நான் சொல்வதை, என் உடம்பு கேக்கும்; அந்த அளவுக்கு தயார் படுத்தி இருக்கேன்.
மும்பை பார்ட்டி லைப்?