4கே தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் 'கேப்டன் பிரபாகரன்' | தூசி தட்டப்படும் 'இடி முழக்கம்' | எந்த படப்பிடிப்புக்கும் செல்ல மாட்டோம் : அவுட்டோர் யூனிட் யூனியன் அறிவிப்பு | 'கேங்கர்ஸ்' படத்துக்கு வரும் புது சிக்கல் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : மூன்று வேடங்களில் நடித்த ஹோன்னப்ப பாகவதர் | அஜித்தின் அடுத்த படம்: சஸ்பென்ஸாக இருக்கும் நிறுவனம் | அஜித்தின் 'டாப் வசூல்' படமாக மாறுமா 'குட் பேட் அக்லி' | நடிகர் நானிக்கு ஓடிடி-யில் அடித்த ஜாக்பாட் | குபேரா : தெலுங்குக்கே முன்னுரிமை? |
கோ, ரவுத்திரம் படத்திற்கு ஜீவா நடிப்பில் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் படம் வந்தான் வென்றான். ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை , படத்தை இயக்கிய இயக்குனர் கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜீவாவுக்கு ஜோடியாக டாப்சி நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தை பற்றிய ஒரு ஸ்பெஷல் ஹைலைட்ஸ்...
* ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை படங்களை இயக்கிய கண்ணன், ஜீவாவை வைத்து இயக்கும் முதல்படம் வந்தான் வென்றான்.
* படத்தில் நாயகன் ஜீவா பாக்சர் வேடம் ஏற்றிருக்கிறார். இதற்காக ஒரு மாத காலத்திற்கும் மேலாக சிறப்பு பயிற்சி எடுத்துள்ளார்.
* ஜீவாவுக்கு ஜோடியாக டாப்சி, கல்லூரியில் படிக்கும் ஆர்க்டெக்ட் மாணவியாக நடித்துள்ளார். ஜீவாவுடன், டாப்சி நடிக்கும் முதல் படம் இது. டாப்ஸி இந்த படத்தில் நெகடிவ்வான பாத்திரத்தில், படத்தின் இரண்டாம் பாதி முழுக்க ஒரு நபரை கொல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் பாத்திரத்தில் நடித்து இருக்கிறாராம்.
* கதாநாயகனாக வந்து ஈரம் படம் மூலம் வில்லனாக பிரபலமான நடிகர் நந்தா, இந்தபடத்தில் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார்.
* ஏற்கனவே ஜீவாவுடன் சிங்கம் புலி படத்தில் காமெடியில் கலக்கிய சந்தானம், இந்தபடத்திலும் காமெடியில் கலக்கியுள்ளார்.
* இந்த படத்தில் வரும் ஒரு காட்சிக்கு நிஜ துப்பாக்கியை எடுத்து கொண்டு மும்பை வீதிகளில் ஒருவரை துரத்தும் காட்சியை படமாக்கி இருக்கிறார் இயக்குநர் கண்ணன்.
* படத்தின் பாடல்களை நா.முத்துக்குமார், தாமரை, யுகபாரதி, கார்கி ஆகியோர் பாடல் வரிகளை எழுத, தமன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்களில் காஞ்சனா மாலா...,அஞ்சனா... பாடல்கள் ஹிட்டாகியுள்ளன.
* படத்திற்கான கதை பயணத்தோடு வருவதால் மும்பை ,கோவா, சுல்தான் வேடேரி, கண்ணூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூட்டிங் நடத்தியுள்ளனர். அதில் குறிப்பாக கேரளாவில் உள்ள சுல்தான் வேடேரி இடத்தில், காடுகளை போன்று அற்புதமான செட்போட்டுள்ளார் கலை இயக்குனர் ரெம்போன்.
கோ படத்திற்கு ஜீவாவிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் வந்தான் வென்றான் படம் வருகிற 16ம் தேதி ரிலீசாக இருக்கிறது. அன்றைய தினமே ஜெய், அஞ்சலி நடித்த எங்கேயும் எப்போதும் படமும் ரிலீசாக இருப்பதால் இரண்டு படங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.