ரஜினியின் ஜெயிலர் 2 வில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | மகாராஜா படத்தால் அனுராக்கிற்கு ஆஸ்கர் இயக்குனரிடம் வந்த அழைப்பு | ஏழு மலை ஏழு கடல் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரீ ரிலீஸ் ஆகும் ரஜினி முருகன் | ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் டெஸ்ட் | கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி உடன் இணைந்து பொங்கல் கொண்டாடிய விஜய் | கேம் சேஞ்சர் படத்தின் ரிசல்ட் ஏமாற்றம் அளிக்கிறது : இயக்குனர் ஷங்கர் | அனுஷ்காவின் காதி படத்தில் முக்கிய வேடத்தில் விக்ரம் பிரபு | பெரிய படங்ளை வாங்கிய ஓடிடி நிறுவனம் | நட்புக்காக கெஸ்ட் ரோலில் நடித்ததுடன் சக்சஸ் மீட்டிலும் கலந்து கொண்ட மம்மூட்டி |
"மைனா" படம் மூலம் பிரபலமான விதார்த், அடுத்து ஏ.வி.எம்., தயாரிப்பில், புதுமுகம் ஆர்.குமரன் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் "முதல் இடம்". ஏ.வி.எம்.,ன் 175வது படமான இப்படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக, புதுமுகம் கவிதா நாயர் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை பற்றிய ஒரு ஹைலைட்ஸ் இதோ...
* தமிழ் சினிமாவில் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏ.வி.எம்., தயாரிக்கும் 175வது படம் "முதல் இடம்".
* டைரக்டர் சுந்தர்.சி, பூபதி பாண்டியன், சுராஜ் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்த ஆர்.குமரன், "முதல் இடம்" படத்தின் மூலம் இயக்குநராக அவதரிக்கிறார்.
* படத்தில் நாயகனாக "மைனா" புகழ் விதார்த் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள கவிதா நாயர், இப்படம் மூலம் கதாநாயகியாக அவதரிக்கிறார்.
* "பழசிராஜா" இயக்குநர் ஹரிஹரன் அறிமுகம் செய்ய நினைத்திருந்த கவிதா நாயரை, தன் கதைக்கு பொருத்தமாக இருப்பார் என்று முழு ஸ்கிரிப்ட்டை சொல்லி, தமிழுக்கு அழைத்து வந்து அறிமுகம் செய்திருக்கிறார் இயக்குநர் குமரன்.
* தஞ்சை மண்ணில் இதுவரை இல்லாத அளவு 100 சதவீத படப்பிடிப்பை ஒரு சந்து கூட விடாமல் படம்பிடித்துள்ளனர்.
* தஞ்சை பெரிய கோயிலை காப்பாற்ற சுற்றுச்சுவர் கட்டியுள்ள கோட்டை பகுதியில் 10 அடி, 30அடி அகலமும் உள்ள ஒரு இடத்தை தேர்வு செய்து, அதில் ஹீரோவின் வீட்டை அமைத்து படம் பிடித்துள்ளனர்.
* பொல்லாதவன், ஆடுகளம் புகழ் கிஷோர், இந்தபடத்தில் கருப்பு பாலுவாக வித்யாசமான ரோலில் நடித்து அசத்தியுள்ளார்.
* நாடோடிகள் புகழ் நமோ முதல் இடத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
* வாழ்க்கையில் எல்லோரும் ஒரு இடத்துக்கு வரவேண்டும் என்று போராடுவோம். அதேபோல் படத்தின் ஹீரோவும் நாம் யோசிக்காத ஒரு இடத்திற்கு வர நினைப்பதை மையமாக வைத்து அதில் கொஞ்சம் காதல், காமெடி, கலாட்டா சென்டிமென்ட் என்று அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் அற்புதமாக படமாக்கியிருக்கிறார் புதுமுகம் இயக்குநர் குமரன்.