மீண்டும் ஒரு ‛ஜென்ம நட்சத்திரம்' : 6 மணி 6 நிமிடம் 6 நொடியில் வெளியான தலைப்பு | தயாரிப்பாளர்களை கண்டித்து: பெப்சி ஒரு நாள் வேலை நிறுத்த அறிவிப்பு | 'மையல்' நாயகிக்கு அழகும், அம்சமும் இருக்கிறது : கே.எஸ்.ரவிகுமார், ஆர்.வி.உதயகுமார் பாராட்டு | தலைப்பு பிரச்னை : சந்தானம் படத்திற்கு தடை கேட்டு வழக்கு | பிளாஷ்பேக்: வில்லன் வேடத்தால் சினிமாவை விட்டு விலகிய கராத்தே மணி | பிளாஷ்பேக் : 75 வருடங்களுக்கு முன்பே 'டைம் டிராவல்' | தனுஷ், விக்னேஷ் ராஜா படப்பிடிப்பு எப்போது துவங்குகிறது | அண்ணன் சூர்யாவிற்கு வழிவிடும் தம்பி கார்த்தி | ஜி.வி.பிரகாஷ், கயாடு லோகர் நடிக்கும் இம்மார்டல் | பாடகி கெனிஷா உடன் ஜோடியாக வந்த ரவி மோகன் : தந்தை என்பது பெயர் அல்ல பொறுப்பு என ஆர்த்தி ரவி காட்டம் |
வேலையில்லா பட்டதாரி படத்தில் பணியாற்றிய அதே கூட்டணி இணைந்துள்ள படம் ''தங்கமகன்''. தனுஷ், சமந்தா, எமிஜாக்சன், சதீஷ், கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள குடும்ப சென்ட்டிமென்ட் படமான இந்த 'தங்கமகன்', திரைக்கு வந்துள்ளது. இப்படம் பற்றி தனுஷ் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...
* தங்கமகன் படம் பற்றி சொல்லுங்கள்?
முக்கியமாக சொல்ல வேண்டியது, இது வேலை இல்லா பட்டதாரி பார்ட் - 2 இல்லை. இந்த படம் புதிய களம், புதிய கதாபாத்திரங்கள், புதிய கதை, தங்க மகன் படம் முழுக்க முழுக்க குடும்பங்களோடு பார்க்க கூடிய பொழுதுபோக்கு படமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரையும் திருப்திபடுத்தும் படமாக தங்கமகன் இருக்கும், எல்லார் வீட்டிலும் நடக்கும் விஷயங்கள் படத்தில் உண்டு.
* அடிக்கடி ரஜினி பட தலைப்பையே உங்க படத்திலும் பயன்படுத்துவது ஏன்?
படிக்காதவன் படத்திற்கு பிறகு, நான் எந்த தலைப்பையும் பயன்படுத்தவில்லை. இந்த படத்திற்கு முதலில் நாங்கள் வைத்த தலைப்பு 'தமிழ் மகன்', தயாரிப்பாளர் வேண்டுதலுக்கு ஏற்ப, வைக்கப்பட்ட தலைப்பு தான் 'தங்க மகன்'.
* படத்தின் கதையை தயார் செய்யும்போது, தலைப்பிற்காக மட்டும் தடுமாறுவது ஏன்?
உண்மையாக சொல்ல வேண்டும் என்றால், புதிய கதையும் கிடைப்பதில்லை, புதிய தலைப்பும் கிடைப்பதில்லை. எல்லா கதையிலும், எல்லா தலைப்பிலும் பல வருஷம் முன்னாலே படங்கள் வந்துவிட்டன. கொஞ்சம் கஷ்டப்பட்டு தேடி பிடித்து தான், வைக்க வேண்டி இருக்கு.
* ஒரு கமர்ஷியல் வெற்றி பெற்ற மாரி படத்திற்கு அடுத்து குடும்ப பாங்கான ஒரு படம் எடுக்க என்ன காரணம்?
மாரி முழுக்க முழுக்க கமர்ஷியல் மாஸ் படம், இதே மாதிரி அடுத்தடுத்து படம் பண்ண வேண்டாம்னு நினைக்கிறேன். எந்த இமேஜ்குள்ளும் நான் மாட்டிக் கொள்ள கூடாதுனு நினைக்கிறேன். தியேட்டருக்கு வரும்போது, இந்த படத்தில் என்ன இருக்கும்னு ஒரு சர்ப்ரைஸ் இருக்கணும். 2006ல் இருந்தே, பொல்லாதவன் ஒரு ஆக்ஷன் படம், இதையடுத்து யாரடி மோகினி என்று ஒரு சப்ஜெக்ட், அடுத்து படிக்காதவன் என்று பக்கா கமர்ஷியல் படம், அதை தொடர்ந்து உத்தமபுத்திரன் என்று குடும்ப கதை வரும். முடிந்த அளவு என்னை திரையில் மாற்றி காட்டவே விரும்புகிறேன்.
* மீசை இல்லாமல் பல படங்களில் நடிக்கிறீர்களே, அந்த கெட்அப் பிடிச்சிருக்கா?
பொதுவாகவே நான் சுமாரான முகம்தான், அதுவும் மீசை எடுத்து விட்டால், இன்னும் கோரமா இருக்கும் அதான் உண்மை. ஆனா இந்த படத்தில், 2 வயசு கம்மியா ஒரு கேரக்டரில் காட்டணும், அது மீசை எடுத்து தான் ஆக வேண்டும். கேரக்டர் இளமையா காட்டணும் என்றால் அந்த ஒரு வழிதான் எனக்கு இருக்கு, நானே ஒத்துக்கறேன்.
* எமி, சமந்தா யார் நடிப்பு பிடித்தது?
2 பேருமே நல்ல திறமைசாலிகள். இந்த படத்தில், 2 பேருக்குமே நல்ல பேர் கிடைக்கும். காதலியாக வரும் எமி, மனைவியாக வரும் சமந்தா இரண்டு பேரின் நடிப்புமே பிடித்திருக்கு.
* நடிகராக மட்டும் இல்லாம, தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, படங்கள் தயாரிப்பது பற்றி?
முக்கிய காரணம் திறமைசாலிகளை அடையாளப்படுத்துறது தான். அனிருத் தொடங்கி, எடிட்டர், நடன இயக்குநர்கள், இந்த படத்தில் கூட ஒரு ஒளிப்பதிவாளரை அறிமுகப்படுத்தியுள்ளோம். எங்கள் நிறுவனத்தின் ஒரு ஒரு படத்திலும் குறைந்த பட்சம் ஒரு திறமைசாலிகளையாவது அறிமுகப்படுத்துவோம். அதற்காக பணம் சம்பாதிக்கவில்லை என்று சொல்லவில்லை. ஒரு துறையிலாவது, திறமைசாலியானவர்களை அறிமுகப்படுத்துவதே எங்கள் நோக்கம். இது எங்க ஆரம்பித்தது என்றால் என் அண்ணன் காதல் கொண்டேன் கதையை, 10 நடிகர்களிடம் சொல்லியிருப்பார், வாய்ப்பு அவர்க்கு கிடைக்கவில்லை. அந்த நேரத்தில், அப்பா இந்த துறையில் இருந்தும் எனக்கு வாய்ப்பு கிடைக்கல, அப்போ, புதிதாக வருபவர்கள் நிலை எவ்ளோ கஷ்டம், நாம ஜெயித்து நல்ல நிலைக்கு வந்தால், நாம் ஒரு நிறுவனம் தொடங்கி, எல்லாருக்கும் வாய்ப்பு கொடுக்கணும் என்று சொன்னார். அது எனக்கு ஆழமா பதிந்து, இப்போ அதை செயல்படுத்துகிறேன்.
* உங்கள் வெற்றிக்கு பலமாக இருப்பவர்களை சொல்லுங்கள்?
24 மணி நேரமும், நமக்காகவே ஒரு ஜீவன் வேண்டிட்டு இருக்கிறது என்றால் அது தாய் தான். என் தாய், தந்தை ரொம்ப முக்கியமானவங்க. அதன் பிறகு என் மனைவி, அவங்க எனக்கு பெரிய பலம், அதையடுத்து கடவுள். கடவுள் அனுகிரஹம் இல்லை என்றால் எதுமே நடக்காது. அவர் அனுகிரஹத்தால் எல்லாமே நல்லபடியாக நடக்கிறது. இல்லன்னா, நம்மள மாதிரி சுமார் மூஞ்சி குமார் எல்லாம் இவ்ளோ தூரம் வந்திருக்க முடியாது.
* ஒரு நாளைக்கு நீங்க எவ்ளோ நேரம் உழைக்கிறீங்க?
கிட்டத்தட்ட 13 மணி நேரம், வேலை அதிகமா இருக்கும் போது, மணி அளவும் அதிகமாகும்.
* வேற எந்த மாதிரியான கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆசை?
கடந்த ஒன்றரை மாதமா, பக்கா நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க ஆசை. எப்ப பாரு ஒரு நல்லவனாவே நடிக்கிறேன், கொஞ்சம் வித்யாசமா விளையாடுற மாதிரி கொஞ்ச நாளாவே யோசிச்சிட்டு இருக்கேன். நெகட்டிவ் ரோலா இருந்தாலும், கை தட்டுற மாதிரி இருக்கணும். அப்படி ஒரு கதைக்காக வெயிட் பண்றேன்.
* உங்க தயாரிப்பு நிறுவனத்தில், மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்பு இருக்கிறதா?
உண்மை சொல்றேன், (வுன்டர்பார்) எங்கள் நிறுவனத்தால் அவருக்கு சம்பளம் கொடுக்க முடியாது. எங்க நிறுவனத்தில் 30 கோடி 35 கோடி பட்ஜெட்ல படம் பண்ண முடியாது. அவர் அந்த லிமிட் தாண்டிட்டார். எனக்கு அது பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது. அதே மாதிரி எங்கள் நிறுவனம் சிவகார்த்திகேயனுக்காக மட்டும் ஆரம்பித்தது அல்ல, நீங்க அப்படி தனித்து பார்த்திங்கனா தவறு. இன்று விஜய்சேதுபதி நடிக்கிறார், நாளைக்கு வேறு ஒரு நடிகர் நடிக்கலாம்.
* நானும் ரவுடிதான் படத்தில், உங்களுக்கு மனவருத்தம் வந்ததாகவும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்காததாகவும் ஒரு செய்தி வந்ததே?
இந்த படத்துக்கு நயன்தாரா நடிக்கனும்னு முடிவு பண்ணது நான்தான், ஹீரோயின் ரோல் ரொம்ப பலமானது, அதுக்கு நயன்தாரா படத்தை தூக்கி கொண்டு போக உதவியா இருப்பாங்கனு முடிவு செய்தேன். படத்தின் நடுவே, செலவு விஷயத்தில் கொஞ்சம் மன வருத்தம் வந்தது உண்மை. ஆனால் யாரும் செலவு செய்யல, தயாரிப்பாளரா நான்தான் செலவு செய்தேன். தொலைபேசியில் பேசினார். மற்றபடி அவங்கவங்க, அவங்கவஙக வேலையை பார்க்கிறோம்.
* சமீபத்தில் அனிருத் - சிம்பு - ஆபாச பாடல் குறித்து?
உண்மையாவே எனக்கு இது தெரியாது. அனிருத் கனடாவில் இருக்கிறார். வந்தவுடன், கேட்டு தெரிந்து கொண்டு, உங்களுக்கு பதில் சொல்கிறேன்.
* உங்களை பின்தொடரும் ரசிகர்கள், குழந்தைகள், பல பேர் இருக்காங்க, கமர்ஷியல் படங்களுக்கு மத்தியில் ஒரு படம் சமூகத்தை சார்ந்த படம் தரலாமே?
நிச்சயமா பண்றேன். பொறியியல் மாணவர்கள் கஷ்டத்தை வேலையில்லா பட்டதாரி படத்தில் கொஞ்சம் சொல்லியிருக்கேன். பெரிய பெரிய பிரச்னைகளை சொல்ல பெரிய ஆளுங்க இருக்காங்க, என்னால் முடிந்த வரை நல்ல படங்களை தருவேன். படத்தில் சிகரெட் பிடிக்கிறேன். நிஜத்தில் அதற்கு எதிரி நான். என்னை பின் தொடரும் ரசிகர்கள், நல்ல விஷயங்களை எடுத்து கொள்வார்கள் என் நிஜ வாழ்க்கையில் இருப்பதை எடுத்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.
* அடுத்தடுத்த படங்கள்?
பிரபு சாலமனின் படம், அதன்பிறகு துரை செந்தில் குமாரின் 'கொடி' என்று அழைக்கப்படும் படம் அடுத்து வெற்றி மாறனின் வடசென்னை, பிறகு ஹிந்தி படம் ராஞ்சனா இயக்குனர் இயக்குகிறார்.