தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற "வேதம்" படம் தமிழில் "வானம்" என்ற பெயரில் வெளிவருகிறது. வி.டிவி. கிரியேஷன்ஸ் சார்பில் கணேஷ் தயாரிக்க, கிரிஷ் இப்படத்தை இயக்குகிறார். படத்தில் சிம்பு, அனுஷ்கா, பரத், வேகா, பிரகாஷ்ராஜ், சோனியா அகர்வால், சந்தானம் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இப்படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்
* தெலுங்கி வேதம் படத்தை இயக்கிய கிரிஷ் தான் தமிழில் வானம் படத்தையும் இயக்கி இருக்கிறார்.
* முதல்முறையாக சிம்புவும், பரத்தும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் ஒரு பெரும் நட்சத்திர கூட்டமே நடித்திருக்கி்னறர்.
* சிம்பு எழுதிய எவன்டி உன்னை பெத்தான் படாலை சிம்புவும், யுவனும் சேர்ந்து ஒன்றரை மணி நேரத்தில் மெட்டமைத்து உள்ளனர். பாடலை மும்பையில் படமாக்கியுள்ளனர். மேலும் இந்தபாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, இந்தியில் இந்த பாட்டை ஆல்பமாக எடுக்கின்றனர்.
* தற்போது பிரகாஷ்ராஜ் எல்லா மொழிகளையும் சேர்த்து 22 படங்களில் நடித்து வருகிறார். வானம் படத்திற்காக 15 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி படத்தை முடித்து கொடுத்து இருக்கிறார்.
* வானம் படத்திற்காக பரத், தன்னை தேடிவந்த இரண்டு படங்களையும் ஒப்பந்தம் செய்யாமல், வானம் பட ரிலீசுக்கு பிறகு முடிவெடுக்க இருக்கிறார். இந்த படத்திற்காக நிறைய இடங்களில் அடிபட்டும், அதை பொருட்படுத்தாமல் உற்சாகமாக நடித்து கொடுத்துள்ளார்.
* படத்தில் சிம்புவுடன் ஆட முதலில் அனுஷ்கா பயந்தாராம். பிறகு சிம்பு நடன அசைவுகளை சொல்லி கொடுத்த பிறகு வெளுத்து கட்டிவிட்டாராம். இந்த படமும், பாடலும் என் கேரியரில் மறக்கவே முடியாது என்று சொல்லி வருகிறாராம்.
* படத்தில் தயாரிப்பாளர் கணேஷ் நடிக்க மறுத்தும், சிம்புவின் ஆசைக்காக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறாராம்.
* பம்பாய், ஹைதராபாத், காரைக்குடி, போன்ற பெரும்பாலான பகுதிகளில் படம் பிடித்துள்ளனர். அதிக பகுதி சென்னையில் எடுத்துள்ளனர்.
* தமிழ் சரியாக பேச வராத இயக்குநர் கிரிஷ், வானம் படம் முடிவதற்குள் தமிழை சரளமாக கற்றுக் கொண்டு தெலுங்கில் செய்த தவறுகளை சரிசெய்து, தமிழில் வானமாக வடிவமைத்துள்ளார்.
* பாடல்கள், உடைகள், படப்பிடிப்பு தளம், மற்ற டெக்னீஷியன்கள் அனைவருமே இந்தபடத்தின் மூலம் நிச்சயம் பேசப்படுவார்களாம்.