ரிச் இந்தியா டாக்கீஸ் சார்பில், பிரபல தொழிலதிபரான ரிச் இந்தியா சந்திரசேகர் தயாரித்து நடித்து, புதுமுகம் பிரேம்நாத்தின் இயக்கத்தில், கவிஞர் சினேகன் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் படம் "உயர்திரு 420". படத்தில் சினேகனுக்கு ஜோடியாக மேக்னா நடித்திருக்கிறார். இவர்களுடன் வசீகரன், பாஸ்கி, ஜெய்பிரகாஷ், ராஜ்கபூர், சிட்டிபாபு, ரமேஷ்கண்ணா, அக்ஷரா, தீபக், அக்ஷயா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை பற்றிய சில சுவரசியமான தகவல்கள்:
* பாடல் ஆசிரியராக இருந்து வந்த சினேகன், யோகி படத்தில் அமீருடன் இணைந்து ஒரு சின்ன கேரக்டரில் நடித்து இருந்தார். இப்போது உயர்திரு 420 படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகனாக அறிமுகமாக ஸ்டண்ட் மாஸ்டர் பவர் பாண்டியனிடம் ஆறு மாதங்கள் கடினமாக பயிற்சி எடுத்தாராம். படத்தின் சண்டை காட்சிகளில் எந்த ஒரு காட்சிக்கும் டூப் போடாமல் நடித்திருக்கிறாராம். மேலும் படத்தில் கார்ரேஸ், கார் டைவ்ஸ் போன்ற அபாயகரமான சண்டைக்காட்சிகளில் சினேகனுக்கு பல இடங்கிளில் அடி பட்டாலும் அதை பொறுப்படுத்தாமல் தொடர்ந்து நடித்தாராம்.
* படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதுமையான கோணங்களில் மலேசியாவின் அழகு இப்படத்தில் புத்தம் புதிதாக காட்டப்பட்டுள்ளது.
* படத்தின் இயக்குநர் பிரேம்நாத் பாரதிராஜாவிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர். படத்தில் ஹாலிவுட் படங்களில் கையாளும் பல தொழில்யுக்திகளை இப்படத்தில் கையாண்டுள்ளாராம். இவர் கனடாவின் "ரைட்டர்ஸ் கில்ட்" எனும் எழுத்து துறையில் பயிற்சி பெற்றவராம். மேலும் 300க்கும் மேற்பட்ட விளம்பர படங்களையும் இயக்கி இருக்கிறார்.
* படத்தின் தயாரிப்பாளர் ரிச் இந்தியா சந்திரசேகர் படத்தை தயாரித்ததுடன், நடிக்கவும் செய்திருக்கிறார். படத்தில் இவருடைய காஸ்டியூமிற்கு மட்டும் கிட்டத்தட்ட ரூ.15லட்சத்திற்கு மேல் செலவு செய்திருக்கிறாராம்.
* படத்தில் ஓபனிங் சாங்கிற்காக மலேசியாவை சேர்ந்த நடன கலைஞர்களுடன் சேர்ந்து நடனம் ஆடி அசத்தியிருக்கிறார் சினேகன்.
* மிககுறைந்த காலத்தில் இப்படத்திற்கு இசையமைத்து முடித்து இருக்கிறார் இசையமைப்பாளர் மணிசர்மா. படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்திருக்கிறதாம்.
* படத்திற்காக மலேசியாவில் தனியார் ஜெட் விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர். அத்துடன் தென்னிந்தியாவின் மிகச்சிறந்த கார்சேசிங் மாஸ்டர் ரவிவர்மாவின் மிரட்டலான் கார்சேசிங்கும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
* அக்ஷரா கெளடா, மேக்னா, அக்ஷயா, ஐஸ்வர்யா என நான்கு ஹீரோயின்கள் இருந்தாலும் படத்தில் கிளாமர் என்ற பெயரில் ஆபாசம் இல்லாமல் சிறந்த படமாக எடுக்கப்பட்டுள்ளது. அக்ஷயாவின் கோர்ட் காட்சிகள் தமிழ் சினிமாவில் அவரின் இரண்டாவது ரவுண்டை உறுதி செய்கிறது.
* பெங்களூரில் உள்ள பிஸியான ஷாப்பிங் மால்கள், ரோடுகள் ஆகியவற்றில் இடைவிடாது படப்பிடிப்பு நடத்தி எடுக்கப்பட்ட ஒரே படம் தமிழ்படம் இதுதான். மேலும் மலேசியாவின் மன்னர் அரண்மனை, பிரதமர் இல்லம், கோர்ட் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.
* இதுவரை வந்த தமிழ்படங்களில் இடம் பெறாத வகையில் இப்படத்தின் சண்டை காட்சிகள் மிகப்பிரம்மாண்டமாக இடம் பெற்றுள்ளது. குறிப்பாக படத்தில் இடம்பெறும் கார் ரேசில் வரும் கார்கள் அனைத்துமே மிக விலையுர்ந்த கார்கள் என்பது குறிப்படத்தக்கது.
* எட்டு வருடங்களுக்கு முன்பு பாரதிராஜாவால் "கண்களால் கைது செய்" படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட கதாநாயகன் வசீகரன், நீண்ட இடைவெளிக்கு பின்னர் இப்படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் "கலாபகாதலன்" பட புகழ் அக்ஷயா இப்படத்தில் நெகடிவ் கேரக்டரில் நடித்து இருக்கிறார்.
* டி.வி, ரேடியோ, இண்டர்நெட், மேடை, சபா என காமெடியில் கலக்கி வந்த பாஸ்கி இப்படத்தில் முழுநீள காமெடி நடிகராக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். இவரது கலக்கல் காமெடி படத்திற்கு பெரும்பலம் என்று கூறுகின்றனர்.
* இயற்கை மழையில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்பதற்காக மூன்று நாட்கள் காத்திருந்து ஒரு பாடலையும், சில காட்சிகளையும் படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
* இந்தபடத்தின் கதைத்தளம் நட்சத்திர ஹோட்டல்களை மையமாக கொண்டு இருப்பதால் பல நட்சத்திர ஹோட்டல்களில் பெரும்பாலான காட்சிகளை படமாக்கியுள்ளனர்.
* படத்தில் மிக புதுமையான முறையில் படமாக்கப்பட்டுள்ள கானா பாட்டில் நடனம் ஆடும் மலேசிய அழகி பானுமித்தா, மலேசியாவின் மிகச்சிறந்த பாடகி. இவரது நடனம் கல்லூரி மாணவர்களின் தூக்கத்தை நிச்சயம் கெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. அத்துடன் இந்தபாட்டில் சிட்டி பாபுவும் ஆடியிருக்கிறார்.
* படத்தின் தயாரிப்பாளர் ரிச்இந்தியா சந்திரசேகர் பல தொழில்களை நடித்தும் ஒரு வெற்றிகரமான தொழில் அதிபர். அவர் லாப நோக்கையும் கடந்து ஒரு காதலுடன், ஜெயித்தே ஆக வேண்டும் என்ற வெறியுடன் தயாரித்து குறிப்பிடத்தக்கது. ஜூன் மாதத்தில் இவரின் அடுத்த பட தயாரிப்பு வேலைகள் ஆரம்பிக்கின்றது. இது முழுக்க முழுக்க கமர்ஷியல் கலந்த காதல் கதை.